30 நிமிடங்கள் தான் சமையல் வேலை.. மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. ஐடி வேலையை விட்டுவிட்டு சமையல் வேலைக்கு போங்க.. ஒரு சமையல்காரரின் ஆச்சரிய வருமானம்..!

மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தனது பகுதிநேர சமையல்காரரின் மாத சம்பளம் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவல், பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயுஷி தோஷி என்ற அந்த வழக்கறிஞர், தனது சமையல்காரர் சமையல்…

cooking

மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தனது பகுதிநேர சமையல்காரரின் மாத சம்பளம் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவல், பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுஷி தோஷி என்ற அந்த வழக்கறிஞர், தனது சமையல்காரர் சமையல் வேலை செய்வதற்கு ரூ.18,000 சம்பளம் வாங்குவதாகவும், அவர் 30 நிமிடங்கள் மட்டுமே சமையல் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தினமும் 10 முதல் 12 வீடுகளில் வேலை செய்வதாகவும், அனைத்து வீடுகளிலும் அவருக்கு இலவச உணவும், தேநீரும் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

“எங்கள் மகாராஜ் சரியாக நேரத்தில் சம்பளம் பெறுகிறார். தாமதமானால் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பிவிடுவார். ஆனால், நான் எனது குறைந்தபட்ச சம்பளத்தை பெறுவதற்காக நடுங்கும் கைகளுடன் ‘தயவு செய்து நினைவூட்டுகிறேன்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.

அதிக சம்பளமா? பலரும் இந்த சம்பளம் மிக அதிகம் என்று சந்தேகம் தெரிவித்தனர். ஒருவர் “குருகிராமிலேயே பகுதிநேர சமையல்காரரின் சம்பளம் ரூ.4,000 முதல் ரூ.6,000 வரைதான்” என்று குறிப்பிட்டு, இந்த சம்பளம் மிகைப்படுத்தப்பட்டது என்றார்.

30 நிமிடங்களில் எப்படி ஒரு முழுமையான சமையலை முடிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பினர். “ஒரு பராத்தா மற்றும் சப்ஜி செய்யவே குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் ஆகும்” என்று ஒரு பயனர் கூறினார்.

“தினமும் 12 வீடுகளில் 30 நிமிடங்கள் வீதம் வேலை செய்தால், மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இது சாத்தியமில்லை” என்று சிலர் விவாதித்தனர். இன்னும் சிலர் இவ்வளவு வருமானம் வருவதாக இருந்தால் எல்லோரும் ஐடி வேலையை விட்டுவிட்டு சமையல் வேலைக்கு செல்லலாமே’ என்று பதிவு செய்தனர்.

சிலர் அந்த சமையல்காரரை ‘சமையல் கலைஞர்’, ‘உணவியல் நிபுணர்’ மற்றும் ‘பேரி ஆலன்’ என நகைச்சுவையாக குறிப்பிட்டனர்.

தன்னுடைய பதிவு ‘கிளிக்பைட்’ இல்லை என்றும், மும்பை போன்ற விலை உயர்ந்த நகரங்களில் இதுவே நிதர்சனம் என்றும் ஆயுஷி தோஷி விளக்கம் அளித்தார். “ஒரு நல்ல பகுதியில் இருக்கும் திறமையான சமையல்காரர்கள் இந்த அளவு கட்டணம் வசூலிப்பது வழக்கம்” என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, இந்த விவாதம் மும்பையில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதையும், சமையல் போன்ற வீட்டு வேலைகளுக்கான தேவை அதிகரித்து, அதன் கட்டணங்களும் உயர்ந்துள்ளதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.