பொதுவாக OnePlus நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன் என்றாலே இந்தியா உள்பட உலகம் முழுவதும் நன்மதிப்பு இருக்கும் என்பதும் குறிப்பாக இந்தியாவில் இந்த போனுக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தங்களது வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய அவ்வப்போது OnePlus நிறுவனம் புதிய மாடல்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு OnePlus Ace 2 Pro என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இந்த மாடலின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
OnePlus Ace 2 Pro ஸ்மார்ட்போன் வரும் ஜூலை மாதம் சீனாவிலும், விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வெளியாகவுள்ளது. இந்த போன் Snapdragon 8+ Gen 2 SoC மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் Qualcomm இன் சமீபத்திய மற்றும் சிறந்த மொபைல் பிராஸசர் இதில் உண்டு என்றும், இது Snapdragon 8 Gen 1 ஐ விட அதிக செயல்திறனை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும் OnePlus Ace 2 Pro ஸ்மார்ட்போன் என்பதும் 120Hz அம்சத்துடன் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் 50MP பிரதான சென்சார், 8MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் என பின்புறத்தில் மூன்று கேமரா கொண்டிருக்கும் என்றும், 32MP செல்பி கேமிராவும் உண்டு எனவும் தெரிகிறது.. அதேபோல் 5000mAh பேட்டரி மற்றும் 100W வேகமாக சார்ஜிங்கிற்கான திறன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
OnePlus Ace 2 Pro ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை சுருக்கமாக பார்ப்போம்.
* Qualcomm Snapdragon 8+ Gen 2 பிராஸசர்
* 6.7-இன்ச் AMOLED, 120Hz டிஸ்ப்ளே
* 12 ஜிபி ரேம்
* 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 50MP பிரதான சென்சார், 8MP அல்ட்ராவைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார் கேமிராக்கள்ள்
* 32 எம்.பி செல்பி கேமிரா
* 5000mAh பேட்டரி