இனி ஒரே ஒரு விமானி தான்.. மற்ற வேலைகளை ஏஐ பார்த்து கொள்ளும்.. புதிய திட்டம்..!

  உலகில் உள்ள அனைத்து விமானங்களிலும் தற்போது இரண்டு விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஒருவர் கேப்டன், இன்னொருவர் துணை விமானி என்ற நிலையில் இருந்தால்தான் விமானங்களை இயக்க முடியும். ஆனால், வருங்காலத்தில் ஒரே ஒரு…

pilots

 

உலகில் உள்ள அனைத்து விமானங்களிலும் தற்போது இரண்டு விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஒருவர் கேப்டன், இன்னொருவர் துணை விமானி என்ற நிலையில் இருந்தால்தான் விமானங்களை இயக்க முடியும். ஆனால், வருங்காலத்தில் ஒரே ஒரு விமானியுடன் விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மற்ற வேலைகளை செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் விமானிகள் வேலைக்கு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிக சம்பளம் கொடுத்து விமானிகளை தக்கவைத்து கொள்ளும் நிலை விமான நிறுவனங்களுக்கு உருவாகியுள்ளது. இந்த விமானி பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், இந்திய விமான நிறுவனங்கள் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளன.

அதன்படி, எவ்வளவு பெரிய விமானமாக இருந்தாலும், அந்த விமானத்தை ஒரே ஒரு விமானி இயக்கலாம். துணை விமானி செய்யும் அனைத்து பணிகளையும் செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளும். விமானம் தொடர்பான அளவீடுகளை கண்காணிப்பது, அவசர நிலையை சமாளிப்பது, அவசர கால சந்தர்ப்பங்களில் தொலைநிலையிலிருந்து தலையிடுவது போன்ற பணிகளை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளும்.

இந்த செயற்கை நுண்ணறிவு, துணை விமானி போல செயல்படும். இனிமேல் தயாராகும் புதிய விமானங்களில் இந்த வசதி இணைக்கப்பட்டிருக்கும். 2030 ஆம் ஆண்டு இந்த விமானங்கள் செயல்படத் தொடங்கும் எனவும், அப்போது ஒரே ஒரு விமானி இருந்தாலே விமானத்தை இயக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை, இந்த தொழில் திட்டங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். வருங்காலத்தில் விமான போக்குவரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால், இந்த புதிய அம்சம் விமானிகள் பற்றாக்குறையை சமாளிக்கும் என்று கருதப்படுகிறது.