ஒரு கோடி ரூபாய் சேர்க்க மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்? எஸ்.ஐ.பி ரகசியங்கள்..!

By Bala Siva

Published:

 

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்தால், 20 அல்லது 30 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி மூலம் சேமிக்கும் வழக்கம் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. முறையான சேமிப்பு மற்றும் சேமிப்பு தொகையின் படிப்படியான உயர்வே கோடீஸ்வரர் ஆகும் பாதையை சுலபமாக்கும். ஒருவர் 10 முதல் 30 ஆண்டுகளுக்கு இடையில் சேமிக்கும் தொகை மற்றும் அதன் திட்டமிடல் காரணமாகவே கோடீஸ்வரர் ஆக முடியும்.

உதாரணமாக,  30 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க மாதம் ₹3,000 எஸ்ஐபியில் முதலீடு செய்ய வேண்டும்.

25 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க மாதம் ₹5,000 முதலீடு செய்ய வேண்டும்.

20 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க மாதம் ₹10,000 முதலீடு செய்ய வேண்டும்.

15 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க மாதம் ₹20,000 முதலீடு செய்ய வேண்டும்.

10 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க மாதம் ₹43,000 முதலீடு செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரே தொகையை சேமிக்காமல், ஒவ்வொரு ஆண்டும் சேமிப்பு தொகையை 10% அதிகரிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு,  முதலில் மாதம் ₹5,000 சேமித்தால், அடுத்த ஆண்டு அதை ₹5,500 ஆக உயர்த்த வேண்டும்.   அதன் பிறகு, அதை ₹6,000 ஆக உயர்த்தவும்.
இவ்வாறு வருமான உயர்வுக்கு ஏற்ப சேமிப்பு தொகையையும் அதிகரித்தால், குறுகிய காலத்தில் அதாவது 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக முடியும்.

எஸ்ஐபி மூலம் சராசரியாக 10%-12% வருமானம் கிடைக்கும் என்பதால், சேமிப்பு பணத்தை தொடர்ச்சியாக சேர்த்து, அதனை எடுக்காமல் விட்டால், 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம் என பொருளாதார ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.