தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருக்கும் என்பதும், சென்டிமென்ட் வேண்டும் என்பதற்காக காட்சிகளை மிகைப்படுத்தி உருவாக்கி வருவதாகவும் குற்றம் சாட்டுவார்.
அந்த வகையில் தனியா தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சீரியலின் வீடியோ கிளிப்பிங்ஸை, நெட்டிசன்கள் பதிவு செய்து, ஒரே ஒரு சீலிங் ஃபேன் மற்றும் ஒரு டெலிபோன் வயரை வைத்து சீரியலை நகர்த்தி இருக்கிறார்கள் என்றும், இப்படி எல்லாம் சீரியல்கள் எடுப்பார்களா? என கேலியும் கிண்டலும் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சீரியலின் வீடியோவில், ஒரு நபர் சாதாரணமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென வழுக்கி விழுகிறார். ஸ்லோமோஷன் காட்சியில் காட்டப்படும் இதில், அவரது மொபைல் போன் எங்கோ பறந்துவிடுகிறது. தரையில் உருண்டு விழுந்தபோது, அருகில் இருந்த லேண்ட் போன் டெலிபோன் மீது மோதிவிடுகிறார். அதன் ரிசீவர் மேலே பறந்து சீலிங் ஃபேனில் சிக்கிக்கொள்கிறது.
அந்த டெலிபோன் வயர் தானாகவே திரும்பி, அந்த நபரின் கழுத்தை சுற்றி இறுக்க ஆரம்பிக்கிறது. எங்கிருந்துதான் அத்தனை மீட்டர் டெலிபோன் வயர் வந்ததோ தெரியவில்லை. அந்த நபரின் கழுத்து முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்க, சீலிங் ஃபேனும் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இதைக் அறையின் வெளியே இருந்து சில கேரக்டர்கள் கவனித்து, உள்ளே வந்து அந்த மனிதரை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மேல், டெலிபோன் வயர் சுத்த, சீலிங் ஃபேன் சுத்த, அந்த நபர் தன்னுடைய உயிரை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சிகள் உள்ளதைப் பார்த்துவிட்டு, நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
“ஹாலிவுட் உருவான ’Final Destination’ போல் இது இருக்கிறது,” என்றும், “இவ்வளவு திரில்லிங்கான ஒரு சீரியலை நான் இதுவரை பார்த்ததே இல்லை,” என்றும் கிண்டல் செய்கின்றனர்.
“இந்த வீடியோவை நான் பொறுமையாக பார்த்துவிட்டேன். என் பொறுமைக்கு எனக்கு நானே சல்யூட் செய்து கொள்கிறேன்,” என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
இந்த சீரியல் காட்சி குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் இந்த கேபிள் வயரை தான் நான் வாங்குவேன். நான் வாங்குகிற எல்லா கேபிளும் தரம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இது மிகுந்த தரம் உள்ளதாக இருக்கிறது,” என்று ஒருவர் நக்கலுடன் கமெண்ட் செய்திருந்தார்.
இன்னொருவர், “டிவிக்கு என ஆஸ்கார் விருது கொடுத்தால், கண்டிப்பாக இந்த டிவி, இந்த தொடரை பரிந்துரை செய்ய வேண்டும்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில், இந்த காட்சி மிகக் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.