20 வயது வித்தியாசத்தில் திருமணம்.. 5 மாதத்தில் தற்கொலை செய்த முதியவர்!

25 வயது இளம்பெண்ணை 45 வயது முதியவர் திருமணம் செய்த நிலையில் 5 மாதங்களில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தின்…

Untitled 91

25 வயது இளம்பெண்ணை 45 வயது முதியவர் திருமணம் செய்த நிலையில் 5 மாதங்களில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தின் சவுடனகுப்பே என்ற கிராமத்தில் வாழ்ந்தவர் சங்கரண்ணா இவருக்கு வயது 45. விவசாயம் செய்துவரும் இவர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 வயது நிரம்பிய மேகனா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சங்கரண்ணா- மேகனா திருமணமானது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்திய ஒன்றாக இருந்தது. இந்தநிலையில் மேகனா 4 மாதம் கர்ப்பமாக இருந்தநிலையில் நேற்று முன் தினம்  சங்கரண்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மேகனாவுக்கும், சங்கரண்ணாவின் தாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனிக்குடித்தனம் செல்லலாம் என்று கூறியுள்ளார்.
சங்கரண்ணா இதற்கு ஒப்புக் கொள்ளாததால் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் சங்கரண்ணா நேற்று முன்தினம் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி அங்குள்ளோரை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன