கூகுள் மேப் பயன்படுத்துவதை கைவிடும் ஓலா… ரூ.100 கோடி மிச்சம்..!

ஓலா நிறுவனம் இதுவரை கூகுள் மேப்பை பயன்படுத்தி வந்த நிலையில் இனிமேல் கூகுள் மேப்பை பயன்படுத்த போவதில்லை என்று கூறிய நிலையில் இதனால் அந்த நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் மிச்சம் என்று கூறப்படுகிறது.…

ola map

ஓலா நிறுவனம் இதுவரை கூகுள் மேப்பை பயன்படுத்தி வந்த நிலையில் இனிமேல் கூகுள் மேப்பை பயன்படுத்த போவதில்லை என்று கூறிய நிலையில் இதனால் அந்த நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் மிச்சம் என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஓலா நிறுவனம் இதுவரை கூகுள் மேப்பை தான் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் இடத்தை அறிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓலா நிறுவனம் சொந்தமாகவே ஓலா மேப் என்பதை உருவாக்கி உள்ளது.

உலகம் முழுவதும் இதற்காக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பயணம் செய்து ஒவ்வொரு வீதி, ஒவ்வொரு தெரு ஆகியவற்றின் டேட்டாக்களை சேகரித்துள்ளனர். பல இடங்களில் ட்ரோன் மூலம் டேட்டாக்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சோதனை முயற்சியாக ஓலா மேப் மூலம் ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளரை கண்டறிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக தங்களுக்கு வருடத்திற்கு 100 கோடி ரூபாய் மிச்சம் என்றும் இனி ஒரு பைசா செலவில்லாமல் ஓலா மேப் மூலம் தொடர்ந்து வாடிக்கையாளரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு சேவை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.