இந்தியாவைப் பொறுத்தவரை, NSE என்ற தேசிய பங்குச்சந்தை மற்றும் BSE என்ற மும்பை பங்குச்சந்தை என்ற இரண்டு முக்கிய பங்குச்சந்தைகள் உள்ளன. இந்த இரண்டு சந்தைகளிலும் ஏராளமான வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பலருக்கு இந்த இரண்டில் எதில் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும் எனும் சந்தேகம் உள்ளது.
NSE மற்றும் BSE ஆகியவற்றில், NSE சந்தையில் சுமார் 1200 நிறுவனங்களும், BSE சந்தையில் சுமார் 5250 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. NSE பட்டியலில் இல்லாத பெரும்பாலான நிறுவனங்கள் BSE பட்டியலில் உள்ளன. அதே நேரத்தில், BSE பட்டியலில் உள்ள ஏராளமான நிறுவனங்கள், BSE பட்டியலிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரு பங்குச்சந்தைகளிலும் பங்குகள் விலைகள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். எனவே, பங்குகளை வாங்கி விற்பதில் கிடைக்கும் லாபத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது. அதே சமயம், NSE பங்குச்சந்தையில் அதிகமானவர்கள் வர்த்தகம் செய்வதால், வாங்கும் மற்றும் விற்கும் விலைகளுக்கிடையிலான வித்தியாசம் குறைவாக இருக்கும். BSE சந்தையில் இந்த வித்தியாசம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
F&O முதலீடுகள் செய்ய NSE சரியாக இருக்கும், நீண்டகால முதலீடுகளுக்கு BSE சரியாக இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, BSE சந்தையை அதிக முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.