இந்த கிராமத்தில் யாரும் ஹெல்மெட் போட வேணாமாம். அரசாங்கமே கொடுத்த அறிவிப்பு!

By Gayathri A

Published:

தமிழகத்தில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ள கிராமம் குறித்த தகவல் வெளியாக மக்கள் பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர்.

அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தின் அருகே உள்ள பகுதிதான் அன்ன வாசல். அன்னவாசலை அடுத்து உள்ள பகுதியான மெய்வழிச் சாலை என்ற கிராமம்தான் ஹெல்மெட்டிற்கு விதி விலக்கு அளிக்கப்பட்ட கிராமமாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது நாம் அறிந்ததே.

ஆனால் இந்த மெய்வழிச் சாலை மக்கள் மட்டும் ஹெல்மேட் அணிய வேண்டாம் என்று விதிவிலக்குக் கொடுத்துள்ளது.

அதாவது மெய்வழிச் சாலையினைச் சார்ந்த ஆண்கள் சிறு வயதில் இருந்தே தலைப்பாகை அணிந்து கொண்டிருப்பதை தங்களது கலாச்சாரமாகக் கொண்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்டுக் கீழே விழுந்தாலும் அந்தத் தலைப்பாகையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கருதப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையிலும் இதனைக் குறிப்பிட்டு இருந்தது.

அதனால் மெய்வழிச் சாலை மக்கள் ஹெல்மெட் அணியாமல் போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் அந்த ஜி.ஓவைக் காட்டினால் போலீசார் பிடிக்க மாட்டார்களாம்.

 

 

Leave a Comment