ஆப்பிள் CEO டிம் குக் இதுகுறித்து கடந்த 2019-ஆம் ஆண்டு கூறியபோது “மக்களுக்காக ஆப்பிள் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்ததே இருக்கும்” என்று தெரிவித்தார். அவரது கனவு தற்போது நனவாக உள்ளது.
ஆப்பிளின் சுகாதாரத்துறை குழு, AI உதவியில் பயனர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த குழு “Project Mulberry” எனும் திட்டத்தில் Health செயலியை முற்றிலும் புதுப்பிக்க இருக்கிறது.
அதே நேரத்தில், சில தகவல்கள், AI டாக்டர் மனித மருத்துவரை மாற்றிவிடும் அளவிற்கு செயல்படலாம் என்றும் தெரிவிக்கின்றன. இதன் மூலம், மருத்துவரின் பகுப்பாய்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஒரு AI ஹெல்த் பயிற்சியாளரை கொண்டு வர ஆப்பிள் திட்டமிடுகிறது.
தற்போது, பயனர் டேட்டா ஐபோன், ஆப்பிள் வாட்ச், இயர்பட்கள், மற்றும் மூன்றாம் தரப்பு சாதனங்களிலிருந்து சேகரிக்கப்படும். அதன் பின், AI, அந்தத் தரவுகளின் அடிப்படையில் தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, AI டாக்டர் உருவாக்கம், ஆப்பிளில் பணிபுரியும் மருத்துவர் தரவுகளை கொண்டு பயிற்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மருத்துவர்களை வெளியிருந்து அமர்த்தும் திட்டமும் உள்ளது.
மேலும், கலிபோர்னியாவில் ஒரு மருத்துவ மெடியா ஸ்டுடியோ அமைக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதில், மருத்துவர்கள் வீடியோ உள்ளடக்கங்களை உருவாக்க முடியும். இந்த புதிய ஹெல்த் செயலிக்காக “மக்களை ஈர்க்கும் சிறந்த மருத்துவர்” ஒருவரை தேர்வு செய்யும் முயற்சியும் நடக்கிறது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, AI டாக்டர் திட்டத்தின் வளர்ச்சி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனை ஆப்பிள் iOS 19.4-இல் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iOS 19, 2025 ஜூன் 9-13 நடைபெறும் WWDC 2025-இல் அறிமுகமாகலாம். அதன் நிலையான அப்டேட், செப்டம்பரில் iPhone 17 உடன் வரும்.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், ஆப்பிளின் AI டாக்டர், அடுத்த ஆண்டு பயனர்களுக்காக இயங்க தொடங்கிவிடும் என்றும், அதன்பின் டாக்டர்களின் தேவை குறைந்துவிடும் என கூறப்படுகிறது. கஷ்டப்பட்டு NEET எழுதி MBBS படிக்க வேண்டிய அவசியம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.