பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் என்பது எந்தவொரு நவீன நாட்டுக்கும் மிக முக்கியமானவை. இந்த உலகில் ஒரு நாடு கூட மருத்துவமனை இல்லாமல் இருக்க முடியும் என்ற எண்ணமே சாத்தியமற்றது போல தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஒரு நாடு இப்படியே உள்ளது, அதுவும் நீங்கள் எதிர்பார்க்காத காரணங்களுக்காக!
இங்கு பேசப்படும் நாடு வாடிகன் நகரம். கிறிஸ்தவ மதத்தின் மையம் மற்றும் உலகின் மிகச் சிறிய நாடாகும். ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைமையகமான இந்த நாடு, அதன் எல்லைகளுக்குள் ஒரு மருத்துவமனையும் இல்லை என்பது தான் ஆச்சரியமான தகவல். மேலும், கடந்த 96 ஆண்டுகளாக இந்நாட்டில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை என கூறப்படுகிறது.
1929 பிப்ரவரி 11-ஆம் தேதி சுதந்திரமான ஒரு நாடு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வாடிகன் நகரத்தில், அதன் உருவாக்கத்திலிருந்து இன்று வரை ஒரு குழந்தையும் பிறந்ததாக பதிவில்லை.
வாடிகன் நகரம் என்பது போப் மற்றும் ரோமன் கத்தோலிக்க மத தலைவர்களின் வசிப்பிடமாக இருக்கிறது. பலமுறை மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சிகள் எடுத்தாலும் அவை நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதற்கெல்லாம் நடுவாக, வாடிகன் நகரம் இத்தாலியின் தலைநகர் ரோம் நகரத்திற்குள் இருப்பதால், எவருக்காவது சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை ரோம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மொத்தம் 0.49 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகரத்தில் சுமார் 882 பேர் மட்டுமே வாழ்கிறார்கள். மருத்துவ வசதிகள் அருகிலேயே உள்ளதால், இந்நகரத்தில் தனிப்பட்ட மருத்துவமனை அவசியம் இல்லை என அதிகாரிகள் கருதியிருக்கலாம். அதே காரணத்தால், எந்தவொரு கர்ப்பிணி பெண்களும் வாடிகனில் தங்காமல் ரோமில் தான் குழந்தை பெற்றிருக்கிறார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
