BBA, BCA போன்ற பல்வேறு துறைகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களை நேர்காணல் செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தேர்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, 5ம் வகுப்பில் கற்பிக்கப்படும் அடிப்படை கணிதக் கேள்வியைக் கேட்டார்:
“ஒரு கார் முதல் 60 கிமீயை 30 km/h வேகத்தில், அடுத்த 60 கிமீயை 60 km/h வேகத்தில் பயணிக்கிறது என்றால், அதன் சராசரி வேகம் என்ன?”
இந்த கேள்விக்கு இருவர் மட்டுமே சரியான பதிலை கூறியதாகவும் பெரும்பாலானோர் பதில் சொல்ல தவறியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், அதே ஜென் Z தலைமுறையினர் மார்க்கெட்டிங் உத்திகள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், வைரல் உள்ளடக்கங்கள் மற்றும் டிஜிட்டல் டிரெண்டுகள் பற்றிய கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்ததாக தெரிவித்தார்.
இதன் மூலம் தெரியும் உண்மை என்னவெனில் ஜென் Z தலைமுறையினர் சமூக ஊடகங்களில் திறமையானவர்கள், ஆனால் பிரச்சனை தீர்க்கும் திறன், தர்க்கம், மற்றும் நிதி அறிவு ஆகியவற்றில் குறைவாக இருக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் நிதி மேலாண்மை, முடிவெடுக்கும் திறன், மற்றும் பகுப்பாய்வு திறன்களில் பிரச்சினைகள் ஏற்படலாம்,” என்று குப்தா தனது பதிவில் எழுதியுள்ளார்.
கல்வியாளர்கள், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மற்றும் வழிகாட்டிகள் இதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். எல்லோருக்கும் அடிப்படை கணித அறிவு என்பது அத்தியாவசியமானது என அவர் வலியுறுத்தினார்.
இந்த பதிவு விரைவாக லிங்க்ட்இனில் வைரலான நிலையில் ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் விமர்சனங்களும் எழுந்தன. சிலர் குப்தாவின் கருத்தை ஆதரித்தனர், “அடிப்படை திறன்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது” என்று ஒப்புக்கொண்டனர். ஆனால் சிலர், ஒரே ஒரு கணிதக் கேள்வி ஒருவரின் திறமையை முடிவு செய்ய முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.