ஒரு நாட்டின் வளமை என்பது வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் விகிதம் பூஜ்ஜியம் என்பதே. ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் விகிதத்தைக் குறைப்பது என்பது அத்தனை சாத்தியமில்லை.
கிட்டத்தட்ட 130 கோடிக்கும் அதிகமாக உலகின் மக்கள் தொகைப் பட்டியலில் இந்தியா சீனாவினை முந்தி முதலிடத்தில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மக்கள் அனைவருக்கும் அனைத்தும் அரசுகளால் முடிந்தவரை இலவசமாகவோ, மானியத்திலோ வழங்கப்பட்டு வருகிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படி வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களில் உழைக்காமல் யாசகம் பெற்று அதில் கிடைக்கும் வருவாயில் பலர் வாழ்கின்றனர். உலகெங்கிலும் யாசகம் பெற்று வாழ்வோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. எந்த வேலைக்கும் செல்லாமல், அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு உறவுகளால் தனித்து விடப்படும் சூழலில் தங்கள் உயிர் வாழ அடுத்தவர்களிடத்தில் யாசகம் கேட்கத் தொடங்குகின்றனர்.
அன்று அமெரிக்க பெண்… இன்று இந்தியா மருமகள்.. US பெண்ணின் உருக்கமான பதிவு.. வைரல் வீடியோ
நாளடைவில் இதுவே பழக்கமாகி அதிலேயே வாழ்கின்றனர். கோவில்கள், பொது இடங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் மக்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில் பிச்சைக்காரர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவர்களின் மறுவாழ்விற்காக அரசு பல முயற்சிகளை எடுத்துவரும் நிலையில் மத்தியப்பிரதேச அரசு அதிரடி முடிவினை எடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் பிச்சைக்காரர்கள் இல்லா நகராமாக இந்தூர் நகரினை மாற்றும் திட்டம் தான். அந்த வகையில் இந்தூர் நகரில் பிச்சைக்காரர்களைக் களையும் பொருட்டு வீதிகளில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அதிரடி திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தூர் நகரில் பிச்சைக்காரர்கள் யாரையாவது பொதுமக்கள் கண்டு அரசுக்குத் தெரிவித்தால் அவர்களுக்கு ரூ. 1000 சன்மானமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 8 பேர் இந்த சன்மானத்தினைப் பெற்றுள்ளனர்.
யாசகம் பெறுவோர் தங்கள் மட்டுமல்லாது தங்கள் குழந்தைகளையும் இத்தொழிலில் ஈடுபடுத்தி அவர்களின் வருங்காலத்தினையும் கேள்விக்குறியாக்கி வருகின்றனர். இவர்களை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பொருட்டு மத்தியப் பிரதேச அரசின் இந்த அதிரடி முடிவு வரவேற்பினைப் பெற்றுள்ளது.