அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தமா? அலறி அடித்து ஓடும் உலக நாடுகள்.. ஆறே மாசத்துல இப்படி பண்ணிட்டிங்களே டிரம்ப்?

டிரம்ப் நிர்வாகம் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக கூறிவரும் நிலையில், அவை உண்மையில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களாக இல்லை என்று கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் 90 நாட்களில் 90 ஒப்பந்தங்கள் என அறிவித்துள்ளது. ஆனால்,…

agreement

டிரம்ப் நிர்வாகம் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக கூறிவரும் நிலையில், அவை உண்மையில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களாக இல்லை என்று கூறப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகம் 90 நாட்களில் 90 ஒப்பந்தங்கள் என அறிவித்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. வியட்நாம், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடனான ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் ஜப்பான், பிரிட்டன், வியட்நாம் மற்றும் கொரியாவுடன் ஒப்பந்தங்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டபோது, செயலாளர் ஹாவர்ட் லட்னிக், “நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது” என்று பதிலளித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தங்கள் வாய்மொழி உடன்பாடுகளாக மட்டுமே உள்ளதாகவும், “சுங்க வரிகளை பூஜ்ஜியமாக குறைக்கவும், அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு சந்தையைத் திறக்கவும்” மட்டுமே இந்த ஒப்பந்தங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டாலும் இது வெறும் வாய் மொழியான ஒப்பந்தங்கள் தான் என்றும் இவை அனைத்தும் ஒப்பந்தங்கள் என அழைத்தாலும், அவை வெறும் “புரிந்துணர்வின் ஒப்பந்தங்கள் மட்டுமே என்றும், இவை உண்மையான வர்த்தக ஒப்பந்தங்கள் அல்ல என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய உலக நாடுகள் தயங்குகின்றன அல்லது அச்சப்படுகின்றன என்பது தான் உண்மையான நிலையாக உள்ளது என்றும், அமெரிக்காவை உலக நாடுகள் தனிமைப்படுத்தும் காலம் வெகுதூரம் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.