நான் எந்தப் பக்கமும் இல்ல, நான் என் பக்கம்தான்.. அதிமுகவும் வேண்டாம்.. திமுகவும் வேண்டாம்.. திராவிடமே வேண்டாம்.. தமிழகத்தில் ஒரு அரசியல் புரட்சி..!

தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிமுகவை சற்றும் மதிக்காத வகையில், கூட்டணிக்கு…

vijay mks eps

தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிமுகவை சற்றும் மதிக்காத வகையில், கூட்டணிக்கு அழைப்பு விடுத்த ஆறு மணி நேரத்திற்குள்ளேயே, “அதிமுகவுடன் கூட்டணி இல்லை” எனத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவும் அதிமுகவும் ஒரே தரத்தில்:

விஜய்யின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது: “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திமுக தற்போது ஊழல் ஆட்சி நடத்துகிறது என்றால், அதிமுக ஏற்கனவே ஊழல் ஆட்சி நடத்திய கட்சிதான்.” எனவே, இந்த இரண்டு கட்சிகளையும் ஒரே தராசில் வைத்துதான் விஜய் பார்க்கிறார். இரு கட்சிகளுக்கும் மாற்று அரசியலை முன்னெடுப்பதே தனது நோக்கம் என்று அவர் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த், கமல்ஹாசன் செய்த தவறை விஜய் செய்ய மாட்டார்:

தமிழக அரசியலில் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கூறிக்கொண்டு களமிறங்கியவர்கள் பலர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன். ஆனால், இவர்களில் இருவருமே பின்னர் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி வைத்து மக்களின் நம்பிக்கையை இழந்தனர். இந்த இருவரும் செய்த தவறை நடிகர் விஜய் செய்ய மாட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறார். திராவிட கட்சிகளுடன் கண்டிப்பாகக் கூட்டணி வைக்க மாட்டார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, பாஜக – கூட்டணி இல்லை:

குறிப்பாக, பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டாலும், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதே விஜய்யின் உறுதியான முடிவு. “50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை அழித்த கட்சிகள் திராவிட கட்சிகள். திராவிடம் என்ற பெயர் இருந்தாலே அந்த கட்சிகளுடன் கூட்டணி கிடையாது,” என்பதே விஜய்யின் கொள்கையாக உள்ளது. அந்த வகையில், அதிமுக, திமுக மட்டுமல்லாமல், தேமுதிகவும், மதிமுகவும் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இல்லை என்பது விஜய்யின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.

சாத்தியமான கூட்டணிகள் மற்றும் அரசியல் புரட்சி:
அதிகபட்சமாக, விஜய்யின் கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகள் வர மட்டுமே வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த இரு கட்சிகள் வந்தாலும், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி. இந்த இரு கட்சிகளும் வராவிட்டால் கூட தனித்து போட்டி என்ற விஜய்யின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இது, தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் புரட்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள் என்றும், அந்த வெறுப்பு விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ வாக்குகளாக மாறும் என்றும் கணிக்கப்படுகிறது. “அதிமுகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்; மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். மாற்று அரசியல் கண்டிப்பாக தேவை” என்பதே மக்களின் மனநிலையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரும் தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.