நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்..! அதிமுகவும் வேண்டாம்.. அதிமுக முன்னாள் தலைவர்களும் வேண்டாம்.. வருவது வரட்டும்.. தனித்து அல்லது காங்கிரஸ் உடன் மட்டும் கூட்டணி.. கட்சி நிர்வாகிகளிடம் கறாராக கூறினாரா விஜய்?

தமிழகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தனது அரசியல் வியூகத்தை மிக தெளிவாக வரையறுத்துள்ளதாக தெரிகிறது. கட்சி நிர்வாகிகளிடம் அவர், “அதிமுகவும் வேண்டாம், அதன்…

vijay1 1

தமிழகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தனது அரசியல் வியூகத்தை மிக தெளிவாக வரையறுத்துள்ளதாக தெரிகிறது. கட்சி நிர்வாகிகளிடம் அவர், “அதிமுகவும் வேண்டாம், அதன் முன்னாள் தலைவர்களும் வேண்டாம். எது வந்தாலும் வரட்டும், நாம் தனித்து அல்லது காங்கிரஸுடன் மட்டும் கூட்டணி அமைப்போம்,” என்று கறாராக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் இந்த முடிவு பல காரணங்களால் எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதிமுகவுடன் கைகோர்த்தால், மக்கள் மத்தியில் தங்கள் கட்சியின் கொள்கைகள் குறித்த குழப்பம் ஏற்படும். திராவிட கட்சிகளுக்கு மாற்று என பிரச்சாரம் செய்ய முடியாது. எனவே அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை விஜய் தெளிவாக முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.

ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் போன்ற அதிமுக முன்னாள் தலைவர்களுடன் கூட்டணி வைப்பது, புதிய அரசியலை முன்னெடுக்கும் விஜய்யின் நோக்கத்திற்கு முரணாக அமையும். ஊழல் மற்றும் பழைய அரசியல் கலாச்சாரத்திற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தும் விஜய், இவர்களுடன் கைகோர்ப்பது தனது பிம்பத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் என்று கருதுகிறார். மேலும் இவர்கள் இருவரிடமும் சமூக ஓட்டுக்களை தவிர வேறு ஓட்டுக்களும் இல்லை.

திமுக-வின் கூட்டணியில் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் காங்கிரஸை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தனது நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் போராடி வரும் நிலையில், தமிழகத்திலும் அந்த அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த கூட்டணி அமையும். காங்கிரஸ் கட்சிக்கு பாரம்பரியமாக சில வாக்கு வங்கிகள் உள்ளன. விஜய்யின் ரசிகர் பலம் மற்றும் இளைஞர் ஆதரவுடன், காங்கிரஸின் வாக்குகள் இணையும்போது அது திமுகவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும். விஜய்யும், காங்கிரஸும் மதச்சார்பின்மையை ஆதரிப்பதால், சிறுபான்மையினர் வாக்குகள் பெருமளவில் இந்த கூட்டணிக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் உறுதியாக தெரிவித்தது, அவர் தனது “நேருக்கு நேர்” என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஏற்கனவே, 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான நேரடி போட்டி என அவர் அறிவித்துள்ளார்.

மேலும், தனது கட்சியில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும், மக்கள் ஆதரவுடன் மட்டும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த நிலைப்பாடு மக்கள் மத்தியில் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

எது எப்படி இருந்தாலும், விஜய்யின் இந்த கறாரான அணுகுமுறை, தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கும்போது, அவர் தனது தனித்து போட்டி முடிவில் உறுதியாக இருப்பாரா அல்லது காங்கிரஸுடன் மட்டும் கூட்டணி வைப்பாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.