மத்திய அரசின் தேசிய நிறுவன தரவரிசைக் கூட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்), தேசிய அங்கீகார வாரியம் (என்.பி.ஏ) ஆகியவை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2024-ம் ஆண்டிற்கான சிறந்த கல்லுரிகள் பட்டியல் மற்றும் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் உள்ள டாப் 926 கல்வி நிறுவனங்களில் 163 கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளன.
இந்தியாவில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகமாகி வருகிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்லூரிகள் உள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இங்கு வந்து மாணவர்கள் உயர் கல்வி பயில்கின்றனர். இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் கல்வியில் முன்னனியில் விளங்குகின்றன.
மேற்கண்ட அறிக்கையின் படி இந்தியாவில் தமிழ்நாடு கல்வி தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 18-வது இடத்தினைப் பெற்றுள்ளது. மேலும் சிறந்து விளங்கும் டாப் 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. இதற்கு அடுத்ததாக டாப் 100 கலைக் கல்லூரிகளில் 37 கல்லூரிகளை தமிழ்நாடு தன்வசம் கொண்டிருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியின் மற்றுமோர் மைல்கல்,, செவ்வாய் கிரகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தண்ணீர்
அதேபோல் இன்ஜினியரிங் கல்லூரிகளைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் உள்ள 14 கல்லூரிகள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. டாப் 50 மருத்துவக் கல்லூரிகளில் 7 கல்லூரிகளும், டாப் 100 நிர்வாகக் கல்வி நிறுவனங்களில் 11 கல்லூரிகளும், டாப் 100 மருந்தியல் கல்லூரிகளில் 12 கல்லூரிகளும், டாப் 50 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 10 கல்லூரிகளும், டாப் 40 பல் மருத்துவக் கல்லூரிகளில் 09 கல்லூரிகளும், டாப் 50 ஆராய்ச்சி நிறுவனங்களில் 09 நிறுவனங்களும் தமிழ்நாடு பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
மேலும் ஒட்மொத்த சிறந்த பல்கலைக்கழமாக சென்னை கிண்டி ஐஐடி இடம்பிடித்திருக்கிறது. மாநிலப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பிடித்திருக்கிறது. 100 % கல்வி அறிவு பெற்ற நமது அண்டை மாநிலம் கேரளாவில் கூட இத்தனை கல்லூரிகள் இடம்பெறவில்லை.
இதன் மூலம் கல்வி மற்றும் மருத்துவத் தலைநகராகவும் இந்தியாவில் தமிழ்நாடு விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.