முதலீட்டாளர்களின் மிகவும் விரும்பத்தக்க முதலீடாக தங்கம் முதல் இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. இந்த நிலையில் மேலும் Zerodha நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் கமத் இதனை தனது அனுபவத்துடன் ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதாவது கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் தொடர்ந்து பங்குச் சந்தையை விட சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளதாக அவர் X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“நான் 2000 ஆம் ஆண்டிலிருந்து, தங்கம் மற்றும் நிஃப்டி 50ஐ கவனித்து வருகிறேன். நிஃப்டி 50ஐ விட தங்கம் அதிக லாபம் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
அதாவது கடந்த 25 ஆண்டுகளில் Gold CFDs (கான்ட்ராக்ட் ஃபார் டிபரன்ஸ்) 2,000% அதிகரித்துள்ளதாகவும், ஆனால் நிஃப்டி 50, 1,470% வருமானத்தை மட்டுமே வழங்கியதை அவர் கூறுகிறார்.
கோல்ட் பத்திரங்கள் (Sovereign Gold Bonds – SGBs) வழங்கப்படுவதை அரசு நிறுத்திய பிறகு, Gold Exchange-Traded Funds (ETFs) அதிக முக்கியத்துவம் பெறும் என கமத் கூறினார். இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்துடன் தொடர்பு கொள்ள இது சிறந்த வாய்ப்பாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
தங்கத்தின் விலை உயராகத் தொடங்கியவுடன் SGB நிறுத்தப்பட்டது. இப்போது SGB நிறுத்தியதால், தங்க ETF-கள் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது என்று கமத் கூறினார்.
தங்க ETF-கள் முதலீட்டாளர்களுக்கு மின்னணு வடிவில் தங்கம் வைத்திருக்கும் வாய்ப்பை வழங்குகின்றன, மேலும் இது வணிகச் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, வரி நன்மைகள் போன்ற பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. தங்கத்தின் விலை பங்குகள் மற்றும் பத்திரங்கள் போல மாறுபடாது என்பதால், பொருளாதார நிலைமைகள் மோசமான போதும் இது பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது.
“தங்கம் இந்திய முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏன் அதிகரிக்கிறது என்று ஒருவரும் சரியாக கூற முடியாது, ஆனால் அது தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. உலக தங்கக் கவுன்சிலின் கணிப்பின் படி, இந்திய வீடுகளில் சுமார் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் உள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை:
24-காரட்: ₹9,163
22-காரட்: ₹8,400
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை 18% அதிகரித்துள்ளது.
ஜனவரியில் 8% உயர்வு
பிப்ரவரியில் 3% உயர்வு
மார்ச் மாதத்தில் 6% உயர்வு
அதே நேரத்தில், MCX தங்கம் (Multi Commodity Exchange) ஒரு புதிய உச்சத்தை எட்டி, 10 கிராமிற்கு ₹91,423 ஆக உயர்ந்தது.
தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயரும் நிலையில், முதலீட்டாளர்கள் ETF-கள் மூலம் தங்க முதலீட்டில் அதிக அக்கறை காட்டுவதாக தெரிகிறது.