2024 ஆம் ஆண்டு தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது. பல இடங்களில் பட்டாசு வெடித்தும், கோலாகலமாக வரவேற்க தயாராகும் அதே வேளையில் ஒரு பக்கம் புத்தாண்டில் எதுவும் ஸ்பெஷல் இல்லை என்றும் வாழ்க்கையில் நல்லது நடக்கும் நாளே புதிய தொடக்கம் என்றும் குறிப்பிட்டு வருவார்கள்.
ஆனால், இதை எல்லாம் தாண்டி பெரும்பாலான மக்கள் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாட தான் செய்வார்கள். இரவு 12 மணி தொடங்கி பொது இடங்களில் கூடி புத்தாண்டை வரவேற்கவும் மக்கள் தயாராக உள்ளனர். இதே போல, தங்களுக்கு நெருங்கியவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தினை நேரிலோ அல்லது போன் மூலமாகவோ தெரிவிப்பார்கள்.
புத்தாண்டுக்கு ரெடி
புத்தாண்டை வெறுமென வரவேற்பதுடன் சில பழக்கங்களை இந்த நாளில் இருந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட பலர் விரும்புவார்கள். நல்ல பழக்கங்களை தொடங்குவது என நிறைய விஷயங்களுக்காக ஆர்வமாகவும் பலர் தயாராகி வரும் நிலையில், New Year Scam தொடர்பாக வெளியான தகவல் அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இன்று என்ன தான் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் எதாவது ஒரு பெயரில் ஆன்லைன் மோசடி நிறைய அரங்கேறி வருகிறது. தெரியாமல் நமக்கு வரும் வீடியோ கால் அல்லது ஏதாவது லிங்க்கை தொட்டு விட்டால் நமது பணத்தை எடுக்கும் பல அதிர்ச்சி குற்றங்கள் விழிப்புணர்வு இருந்தும் நடந்து தான் வருகிறது.
அப்படி ஒரு சூழலில், புத்தாண்டை முன்னிட்டு ஒரு புதிய மோசடியும் உருவாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தரப்பில் இருந்து வெளியான தகவலின் படி, புத்தாண்டு தொடர்பாக வாழ்த்துக்களை அனுப்பும் லிங்குகள் நமது மொபைலில் வந்தால் உடனடியாக அதை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
New Year பேர்லயும் ஸ்கேமா?
அப்படி செய்யும் பட்சத்தில் அந்த லிங்குகள் தவறாக இருந்து நமது வங்கி கணக்கின் விவரங்களை சேகரிப்பதற்கான ஒரு மோசடியாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மிக நெருங்கியவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்தால் பிரச்சனை இல்லை என்றும் சந்தேகம் இருக்கும் நபர்களிடம் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும் ஹெல்ப்லைன் நம்பரான 1930- ஐ அழைக்கவும் அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலுமே தற்போது மோசடிகள் மிக சர்வ சாதாரணமாக நடந்து வருவதால் புத்தாண்டை முன்னிட்டு வரும் லிங்குகள் விஷயத்திலும் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.