இது பிறவியிலேயே உள்ள இதயக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு உதவுவதோடு, இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பெரியவர்களுக்கும் பயன்படக் கூடும்.
தற்போதைய பேஸ்மேக்கர்கள் இதய தசைகளுடன் அறுவை சிகிச்சையின் மூலம் இணைக்கப்படுகின்றன. அவை வயர்கள் மூலம் நோயாளியின் மார்பில் இருக்கும் மின்சார சாதனத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இவை தேவையில்லாத நிலையில் வந்தவுடன், மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் அவற்றை அகற்ற வேண்டும் என்பதும் முக்கியம்.
ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பேஸ்மேக்கர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் தடிமன் 1 மில்லிமீட்டர், நீளம் 3.5 மில்லி மீட்டர் மட்டுமே. தேவையில்லாத நிலையில் உடலில் கரைந்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், மீண்டும் அறுவை சிகிச்சை தேவையில்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சிறிய பேஸ்மேக்கர் நோயாளியின் மார்பில் அணியக்கூடிய ஒரு மிருதுவான தாளுடன் (soft patch) இணைக்கப்பட்டுள்ளது. இந்த தாள் இதயத்தின் தவறான துடிப்புகளை கண்டறிந்து, ஒளி மூலம் சாதனத்துக்கு எந்த விதமான இதயத் துடிப்பை தூண்ட வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.
இந்த சாதனம் ஒரு கல்வானிக் செல் (Galvanic Cell) மூலம் இயக்கப்படுகிறது, இது உடலின் திரவங்களை பயன்படுத்தி வேதியியல் ஆற்றலை மின்சார ஒற்றைகளாக மாற்றி இதயத்தை தூண்டுகிறது.
இந்த பேஸ்மேக்கரை முதலில் பன்றிகள், எலிகள், நாய்கள் ஆகியவற்றுக்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.