கான்செர்ட், சினிமா செல்பவர்களுக்காக.. புது டயபரை அறிமுகம் செய்த நிறுவனம்.. விலை மட்டும் இத்தனை ஆயிரமா…

பொதுவாக குழந்தைகள் என வரும் போது தாங்கள் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்பதை நிச்சயம் வார்த்தைகளால் சொல்லிவிட மாட்டார்கள். திடீரென விருந்தினர்கள் கையில் இருக்கும் போதே சிறுநீர் சென்று விடுவார்கள் என்பதால் பொது…

Adult Diapers

பொதுவாக குழந்தைகள் என வரும் போது தாங்கள் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்பதை நிச்சயம் வார்த்தைகளால் சொல்லிவிட மாட்டார்கள். திடீரென விருந்தினர்கள் கையில் இருக்கும் போதே சிறுநீர் சென்று விடுவார்கள் என்பதால் பொது இடங்களுக்கு செல்லும் போது பெற்றோர்கள் அவர்களுக்கு டயப்பர் அணிந்தபடி கொண்டு செல்வார்கள்.

தங்களது குழந்தைகளை பார்த்து கொள்ளும் விஷயத்தில் தாய்மார்களுக்கு இந்த டயபர் ஒரு பெரிய வரபிரசாதமாக தான் உள்ளது. இதன் மூலம், டயப்பரை தாண்டி சிறுநீர் உள்ளிட்ட எதுவும் வந்து விடாது என்பதால் அது பெற்றோர்களுக்கு நிம்மதியான பொருளாகவே உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வயதாகி படுத்த படுக்கையாக இருக்கும் முதியோர்களுக்கும் சில இடங்களில் டயபர் பயன்படுத்துகின்றனர். எழுந்து நடக்க முடியாது என்பதால் அவர்களை கவனித்து கொள்ளவும் அது சிறந்த விஷயமாக இருக்கும்.

எல்லாருக்கும் டயபர் போடலாம்..

ஆனால் குழந்தைகள் மற்றும் முடியாத முதியோர்களை தாண்டி நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு டயபர் தேவையா என கேட்டால் பலரது பதில் இல்லை என்பதாக தான் இருக்கும். ஆனால், அனைவருக்குமான ஒரு டயபரை தான் தற்போது சில நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது எங்கேயாவது ஒரு இடத்தில் சென்று கொண்டிருக்கும் போதோ திடீரென பலருக்கும் ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் என்று நிர்பந்தம் வரலாம்.

ஆனால் அந்த நேரத்தில் அதற்கான வழிகள் எதுவும் இல்லாத நிலையில் சில மணி நேரங்கள் அடக்கிக்கொண்டு பின்னர் அதுவரை பொறுமையாக இருந்து தான் செல்ல வேண்டும் சூழல் இருக்கும். அப்படி வருவதை தவிர்ப்பதற்காக தான் இந்த டயபரை இரு நிறுவனங்கள் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர்கள் தற்போது விளம்பரப்படுத்துவது பிரபல மியூசிக் கான்செர்ட் அல்லது திரைப்படங்கள் பார்க்க செல்லும்போது ஒரு முக்கியமான கட்டத்தில் ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டிய அவசரமும் அதிகமாக இருக்கும்.

இது இப்ப தேவையா?..

இதனால் அதனை சமாளிப்பதற்காக இந்த டயபர் பெரிய அளவில் உதவும் என்ற பெயரில் அவர்கள் விளம்பரமும் செய்துள்ளனர். இதனால் திரைப்படம் அல்லது ஒரு கான்செர்ட்டின் நடுவிலோ தேவையில்லாமல் எழுந்து எங்கேயும் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த பதிவு தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இப்படி பொது இடங்களில் ரெஸ்ட் ரூம் செல்ல முடியாமல் தவிக்கும் பலரும் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தாலும் இன்னொரு பக்கம் இப்படி எல்லாம் யார் தான் யோசிக்கிறார்கள், இதெல்லாம் இப்போது தேவையா என்றும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.