பிறந்து 18 நாள் தான்.. ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை விற்ற அப்பா.. அதிரடி காட்டிய போலீஸ்..!

தெலுங்கானா மாநிலத்தில் பிறந்து 18 நாள் ஆன குழந்தையை அந்த குழந்தையின் தந்தை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் அந்த குழந்தையை மீட்டு உள்ளனர்.…

baby

தெலுங்கானா மாநிலத்தில் பிறந்து 18 நாள் ஆன குழந்தையை அந்த குழந்தையின் தந்தை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் அந்த குழந்தையை மீட்டு உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆசிப் அலி மற்றும் ஆஸ்மா பேகம் என்ற தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை விற்று விடலாம் என்றும் தனக்கு மிகுந்த பணக்கஷ்டம் இருப்பதால் குழந்தையை விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும் என்றும் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

ஆனால் ஆஸ்மா பேகம் இதற்கு சம்மதிக்காத நிலையில் குழந்தையை விற்க சம்மதித்தே ஆக வேண்டும் என்று மிரட்டியதை அடுத்து வேறு வழியில்லாமல் குழந்தையை கொடுக்க சம்மதித்துள்ளார். இதனை அடுத்து ஆசிப் அலி அந்த குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் குழந்தையை பிரிந்து இருக்க முடியாத தாய் பேகம் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு குழந்தையை வாங்கிய நபரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்ததாகவும் இதற்கு ஒரு புரோக்கர் உதவி செய்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து குழந்தையை வாங்கிய பெற்றோர், புரோக்கர் மற்றும் குழந்தையை விற்ற தந்தை ஆகிய அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.