அதிகபட்ச தனியுரிமையும், எளிமையான அடையாள சோதனையையும் வழங்கும் வகையில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று புதிய ‘ஆதார் முகப்பதிவு செயலியை அறிமுகம் செய்தார். Face ID Aadhaar App என்று கூறப்படும் இந்த புதிய செயலி தற்போது பீட்டா வெர்ஷனில் உள்ளது.
இந்த புதிய ஆதார் செயலியை பயன்படுத்த தொடங்கிவிட்டார். இனிமேல், ஆதார் அட்டையை கையிலோ, பையிலோ, பர்ஸிலோ வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெராக்ஸ் காப்பியும் தேவையில்லை. பயனர்கள் முகம் அல்லது பிங்கர் பிரிண்ட் மூலம் QR கோட் ஸ்கேன் செய்து தங்கள் ஆதார் விவரங்களை பாதுகாப்பாக பகிர முடியும்.
அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
“இப்போது ஒரே ஒரு க்ளிக்’ மட்டும் போதுமானது. பயனர்கள் தேவையான ஆதார் தகவல்களை எளிதில் பகிர முடியும். அவர்களின் தனிப்பட்ட தகவல்களை முழுமையாக கட்டுப்படுத்தும் திறன் இந்த செயலியில் இருக்கிறது. உதாரணமாக ஹோட்டல் ரிசெப்ஷன், கடைகள், விமான பயணம் போன்ற இடங்களில், ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்து, முகபதிவு அல்லது பிங்கர் பிரிண்ட் மூலம் உடனடி ஆதார் சோதனை செய்யலாம். பயனரின் ஒப்புதல் இல்லாமல் எந்த தகவலும் பகிரப்படாது. இதனால் ஆதார் தகவல் கசிவுகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
இந்த புதிய செயலி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கலாம், நகல் அல்லது forged ஆதார் கார்டுகள் பயன்படுவதை தடுக்கலாம், முழுமையான டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உறுதி செய்யப்படலாம். முக்கியமாக, இந்த செயலியை இலவசமாக Android மற்றும் iOS சாதனங்களுக்கு விரைவில் வெளியாக உள்ளது.