2 வருசம் ஆயிடுச்சு.. ஸ்டேஜ்ல பேசுறத நிஜ வாழ்க்கைலயும் பண்ணுங்க.. தனுஷால் ஆவேசமடைந்த நயன்தாரா..

By Ajith V

Published:

Nayanthara Vs Dhanush : நடிகர் தனுஷ் தொடர்பாக பிரபல நடிகை நயன்தாரா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான், போடா போடி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல நடிகை நயன்தாராவை காதலித்து கரம்பிடித்திருந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தையும் உள்ளது.

இதனிடையே, நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட விக்னேஷ் சிவன் – நயன் திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்னும் கொஞ்ச நாட்களில் வெளியாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இது தாமதமானதன் காரணம் ஏன் என்றும் புரியாமல் இருந்து வந்தது.

நயன் மீது புகாரளித்த தனுஷ்

அப்படி ஒரு சூழலில் தான் தனுஷை குறிப்பிட்டு தற்போது ஒரு அறிக்கையை நடிகை நயன்தாரா வெளியிட, டாக்குமெண்டரி வீடியோ தாமதமான காரணமும் தெரிய வந்துள்ளது. முன்னணி நடிகர் தனுஷ் பிரபல தயாரிப்பாளராகவும் இருந்துவரும் நிலையில் அவரது தயாரிப்பில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்த நிலையில் அவர்களின் திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தில் வரும் பாடலை பயன்படுத்த தனுஷ் இரண்டு ஆண்டுகளாக அனுமதி கொடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

Nayan Vignesh Marriage

அவரிடம் NOC கேட்டு இரண்டு வருடங்களாக முயற்சி செய்தும் அதற்கு தனுஷ் எந்தவித பதிலளிக்காமல் புகார் மட்டுமே அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி சமீபத்தில் அறிக்கையை வென்ற வெளியிட்டுள்ள நயன்தாரா, உங்களது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டோரின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் சினிமாவில் சாதித்திருக்கிறீர்கள். ஆனால் நான் தனியாளாக எந்தவித சினிமா பின்புலமும் இன்றி மிக கடினமாக உழைத்து முன்னேறி உள்ளேன்.
Nayan Press Release 1

எனது நெட்ப்ளிட்ஸ் ஆவணப்படத்திற்காக பலரும் காத்திருந்து வந்த போதும் நானும் ரவுடி தான் படத்தில் வரும் பாடல்களை பயன்படுத்த அனுமதி நீங்கள் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தீர்கள். இதனால்தான் இரண்டு வருடங்களாக இந்த வீடியோவை ரிலீஸ் செய்யாமல் உங்களது அனுமதிக்காக காத்திருந்தோம். ஆனால் நீங்கள் இன்னும் அனுமதி கொடுக்காததால் நாங்களாக புதிதாக எடிட் செய்து அதனை வெளியிட உள்ளோம். நானும் ரவுடிதான் உங்களது தயாரிப்பாக இருந்தாலும் அதில் வரும் பாடல் வரிகள் விக்னேஷ் சிவன் எழுதியது. ஆனால் அந்த பாடல் வரிகளை கூட நீங்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்காமல் போனது எனது இதயத்தை நொறுக்கி விட்டது.

ஸ்டேஜ் பேசுறதை நிஜத்துயும் பண்ணுங்க..

தொழில் ரீதியாக நீங்கள் இந்த முடிவை எடுத்தாலும் தனிப்பட்ட ரீதியில் எங்கள் மேல் இருக்கும் பழி வாங்கும் நோக்கத்தினால் இப்படி செய்துள்ளீர்கள். அதைவிட நீங்கள் லீகல் நோட்டீஸ் அனுப்பியது இன்னும் அதிர்ச்சியாக அமைந்திருந்தது. பிசினஸ் உள்ளிட்ட விஷயங்களைத் தாண்டி நீங்கள் ஒரு நல்ல மனிதராக அதை பயன்படுத்த அனுமதித்திருக்க வேண்டும்.
Nayan Press Release 2

நீங்கள் மேடையில் பேசுவதில் பாதியாவது நிஜ வாழ்க்கையில் செய்ய பாருங்கள். அப்பாவி ரசிகர்கள் முன்னிலையில் நீங்கள் மேடையில் பேசுவதை நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் கூட பின்பற்றுவதில்லை என நினைக்கிறேன். நீங்கள் அடுத்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்காக ஏதாவது ஒரு போலியான கதையை தயார் செய்து பஞ்ச் லைனுடன் சேர்த்து பேச தான் போகிறீர்கள். ஆனால் கடவுள் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
Nayan Press Release 3

நீங்கள் அப்படி மேடையில் பேசும் விஷயங்களை நிஜம் வாழ்க்கையிலும் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில் வரும் 3 வினாடி கிளப்பிற்காக 10 கோடி ரூபாய் வரை தனுஷ் கேட்டதாகவும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். இதைத் தாண்டி இன்னும் பல கருத்துகளையும் தனுஷ் பற்றி நயன்தாரா குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக பேசு பொருளாகவும் மாறி உள்ளது.