தனுஷுக்கு நயன்தாரா சொல்லி கொடுத்த ஜெர்மன் வார்த்தை.. இணையத்தில் வைரலாகும் அதன் பொருள்..

தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தனுஷுக்கு எதிராக பிரபல நடிகை நயன்தாரா பகிர்ந்த அறிக்கையை பற்றி தான் பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். போடா போடி மூலம் தமிழ்…

Nayanthara German Word to Dhanush

தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தனுஷுக்கு எதிராக பிரபல நடிகை நயன்தாரா பகிர்ந்த அறிக்கையை பற்றி தான் பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், அடுத்ததாக தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

தனுஷ்நயன்தாரா மோதல்?

மேலும் இந்த திரைப்படத்திற்கு நடுவே தான் விக்னேஷ், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்து பின்னர் திருமணத்தில் முடிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்களது திருமணம் குறித்து டாக்குமெண்ட்ரி வீடியோ ஒன்று நெட்ப்ளிக்ஸ் ளத்தில் வெளியாகும் என அடுத்த சில மாதங்களிலேயே அறிவித்திருந்தர்.

இது தொடர்பான ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக இதன் முழு வீடியோ ரிலீஸ் ஆகாலேயே இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த வீடியோ நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் தருணங்கள் தொடர்பான தகவல்களும் இடம்பெற்றிருக்கும் என தெரியும் நிலையில் ரசிகர்களும் இதனை பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
DHANUSH ISSUE

நிஜ வாழ்க்கையும் அத பண்ணுங்க..

இதற்கு மத்தியில் தான் நடிகை நயன்தாரா தனுஷை விமர்சித்து வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று தற்போது அதிக பரபரப்பை உருவாக்கி இருந்தது. நயன்தாரா நடித்திருந்த நானும் ரவுடி தான் திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளை இந்த திருமண வீடியோவில் அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு தனுஷ் தரப்பில் இரண்டு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்ததுடன் நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இத்தனை நாட்கள் அவருக்காக காத்திருந்தும் அனுமதி கிடைக்காததால் அந்த நானும் ரவுடிதான் பாடல் காட்சிகளை மட்டும் வெட்டி நீக்கி விட்டனர். அப்படி ஒரு சூழலில் தான் தனுஷை குறிப்பிட்டு நயன்தாரா ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்த மூன்று பக்க அறிக்கையில் தனுஷ் பற்றி பல விஷயங்களை பகிர்ந்த நயன்தாரா, இசை வெளியீட்டு விழாவில் பேசுவது போல கொஞ்சமாவது நிஜ வாழ்க்கையில் இருக்க கற்றுக் கொள்ளுங்கள் என தனுஷை கேட்டுக் கொண்டிருந்தார்.

அது மட்டுமில்லாமல் அவர் எடுத்த பல முடிவுகளால் தான் அதிர்ந்து போனதாகவும் குறிப்பிட்டுள்ள நயன்தாரா, இனிமேலாவது அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும்கூறியுள்ளார். தனுஷை பற்றி தெரியாத பல தகவல்களை இதில் நயன்தாரா குறிப்பிட்டதால் ரசிகர்களும் இதை அறிந்து அதிர்ந்து போயுள்ளனர்.

தனுஷுக்காக நயன் சொன்ன ஜெர்மன் வார்த்தை

அப்படி இருக்கையில், தனுஷிற்காக ஒரு புதிய ஜெர்மன் வார்த்தையை நயன்தாரா தனது அறிக்கையில் குறிப்பிட, அதன் பொருள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. Schadenfreude என்ற வார்த்தையை தனுஷுக்கு அறிமுகம் செய்து வைத்த நயன்தாரா, “இந்த வார்த்தையின் எமோஷனை இனி நாங்கள் மட்டுமில்லாமல் யாரிடமும் நீங்கள் பெற நினைக்கமாட்டீர்கள் என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள்என குறிப்பிட்டிருந்தார்.
Nayan Wikki

ந்த ‘Schadenfreude’ என்று ஜெர்மன் வார்த்தையின் பொருள், மற்றவரின் கஷ்டங்கள், வேதனை, வலிகள், அவமானங்கள் ஆகியவற்றை பார்த்து ஒருவர் மகிழ்ச்சி அடைவது தான். அதாவது தங்களின் கஷ்டங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தது போல இனி யாருடைய தோல்வியையும் ராசிக்காதீர்கள் என்ற நோக்கில் தனுஷுக்கு இந்த வார்த்தையை நயன்தாரா அறிமுகம் செய்து வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.