வெளிய வாங்க வெளிய வாங்கன்னு கூப்பிட்டிங்கள்ல்ல.. இனிமேல் சம்பவம் பார்க்க போறீங்க..ஓரணியில் தமிழ்நாடு உண்மைதான்.. ஆனால் அந்த ஓரணி தவெக.. நரேஷ்

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நரேஷ் என்பவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, “விஜய்யை ‘வெளியே வாங்க வெளியே வாங்க’ என்று கூப்பிட்டீங்கல்ல? அவர் வெளியே வரப்போகிறார், இனிமேல் தான் தமிழ்நாடு ஒரு…

naresh

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நரேஷ் என்பவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, “விஜய்யை ‘வெளியே வாங்க வெளியே வாங்க’ என்று கூப்பிட்டீங்கல்ல? அவர் வெளியே வரப்போகிறார், இனிமேல் தான் தமிழ்நாடு ஒரு சம்பவத்தை பார்க்கப் போகிறது” என்று தெரிவித்தார். மேலும், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பது உண்மைதான். ஆனால், அந்த ஓரணி ‘தமிழக வெற்றிக் கழகம்’ தான்” என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு போராட்டங்களை நடத்தப் போகிறது என்றும், பரந்தூர் விவகாரம், ஜாக்டோ-ஜியோ விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக இறங்கும், சாம்சங் பிரச்சனைகளுக்காக இறங்கும், தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து பிரச்சனைகளுக்காகவும் ஒவ்வொன்றிற்காகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தொண்டர்களும் வீதிக்கு வருவார்கள். அப்போது நீங்கள் தாங்க மாட்டீர்கள்” என்று நரேஷ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “வெளிய வாங்க வெளியே வாங்க என்று கூப்பிட்டீங்கல்ல, வந்தாச்சு! இனிமேல் ஒரு சம்பவத்தைத்தான் பார்க்கப் போறீங்க” என்று தெரிவித்தார்.

“விஜய்க்கு எல்லா தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். ஒரு கோடியை தாண்டிய உறுப்பினர் எண்ணிக்கை தற்போது இரண்டு கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2026 இல் ஆட்சி அமைப்பது உறுதி. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பார்த்தவர்கள்தான் தெரியும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஆட்டோக்களில் இருக்கிறது, கேப்களில் இருக்கிறது, வீடுகளில் கொடி பறக்கிறது, இருசக்கர வாகனங்களில் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இருக்கிறது” என்று கூறிய நரேஷ், “ஒரே ஆண்டில் கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் மக்களுக்கு விஜய் பற்றி புரிந்துவிட்டது என்றும், விஜய்க்குத்தான் ஓட்டு என்று முடிவு செய்துவிட்டார்கள்” என்றும் கூறினார்.

“ஆட்சியாளர்கள் அடக்குமுறையை செலுத்தினால், அது இருமடங்காக மக்களிடமிருந்து வெளிப்படும் என்றும், வெள்ளைக்காரன் அடக்குமுறையை ஒழித்து தான் சுதந்திரம் வாங்கியபோது உட்கார்ந்திருக்கிறோம். இனி ஆட்சியாளர்களின் அடக்குமுறையை ஒழிப்பதுதான் மக்களின் வேலை” என்றும் அவர் தெரிவித்தார். பரந்தூர் விவகாரம் குறித்து விஜய் பேசினால் உடனே சமூக வலைத்தளங்களில் எதிர்வினை ஆற்றுகிறார்கள். 200 ரூபாய் உருட்டு பீப்பிள்கள் பரந்தூரில் விமான நிலையம் அமைக்காமல் மெரினாவிலா அமைக்க முடியும் என்று கூறுகிறார்கள். மெரினாவில் அமைக்க வேண்டும் என்று விஜய் கூறினாரா? ஒரு பொய்யான செய்தியை மக்களுக்கு முன்னெடுத்திருக்கிறார்கள். இந்த 200 ரூபாய் உருட்டு உபிக்களின் உருட்டல்கள் எல்லாம் 2026ல் செல்லாது” என்றும் நரேஷ் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.

“இனி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் விஜய் என்ன பேசுகிறார் என்பதை தமிழக மீடியாக்கள் மறைத்தாலும், நேஷனல் மீடியாக்களில் கண்டிப்பாக வெளியாகும். அப்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வரும்” என்றும் நரேஷ் தெரிவித்தார்.

“தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. 50 ஆண்டுகளாக சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது. சிஸ்டத்தை சரி செய்வதற்காகத்தான் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் ஆரம்பித்துள்ளார். கண்டிப்பாக ஆட்சியை பிடித்து சிஸ்டத்தையும் சரி செய்வார்” என்றும் நரேஷ் அறிவித்தார்.

“விஜயை யார்?” என இயக்குநர் எச். ராஜா கேள்வி கேட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த நரேஷ், “எச் ராஜா யார் என்பது பாஜகவில் உள்ள பலருக்கே தெரியாது. இவர் எதையாவது உளறிவிட்டு அதன் பின் மன்னிப்பு கேட்கும் வழக்கம் உடையவர் தான். விஜய்யை யார் என்று கேட்டதற்குன் ஒரு நாள் மன்னிப்பு கேட்பார்” என்று தெரிவித்துள்ளார்.