பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பிய நாம் தமிழர் கட்சி ஸ்ரீரத்னா அல்லிமுத்து!

தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாள் இன்னும் இரண்டு நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையினை ஒட்டி ஒவ்வொரு ஆண்டு மாநில அரசு பொங்கல் பரிசுகளை வழங்குவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு 21 பொருட்கள்…

Naam Tamilar Katchi Sriratna Allimuthu returns Pongal prize to Chief Minister

தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாள் இன்னும் இரண்டு நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையினை ஒட்டி ஒவ்வொரு ஆண்டு மாநில அரசு பொங்கல் பரிசுகளை வழங்குவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கி வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுக்கப்படும் பொருட்கள் தரமில்லை என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ ரத்னா தன் வீட்டில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பி அனுப்பி அத்துடன் இலவசம் வேண்டாம், உரிமைகள் மட்டுமே வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரது கடிதத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசு என்பது ஒரு நாள் கூத்தாய் முடிந்துவிடும், ரூ.300 மதிப்புள்ள இலவசப் பொருட்களை வேண்டாம். மாறாக தமிழக மக்களின் உரிமையான அரசு பணியைத் தமிழருக்கு தாருங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்த பதிவினை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஷேர் செய்துள்ளார்.

ஸ்ரீரத்னா அல்லிமுத்துவின் இந்த பதிவை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன