அமெரிக்காவில் சமீபத்தில் தெளிவான நீல வானில், ஒரு வட்டத்திற்குள் “4” என்ற எண் கொண்ட ஒரு மர்மமான லோகோவை பொதுமக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். பலரும், அதை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் ஒரு பெண், ஒரு விமானம் வானில் அந்த லோகோவை உருவாக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த வீடியோவில், அவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சூரிய குளியல் எடுத்து கொண்டிருந்தபோது, ஒரு சிறிய விமானம் வானில் இதுபோன்ற சின்னங்களை உருவாக்குவதை கண்டார்.
அந்த பெண், விமானம் முதலில் தெளிவான நீல வானில் ஒரு வட்டத்தை வரைந்த தருணத்தை பதிவு செய்ய தொடங்கினார். இதை தொடர்ந்து, அது வட்டத்திற்குள் “4” என்ற எண்ணை உருவாக்க தொடங்கியது. அப்போதே, வரவிருக்கும் மார்வெல் திரைப்படமான ‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ திரைப்படத்திற்கான ஒரு விளம்பர உத்தியாக இது இருக்கலாம் என்று அவர் யூகித்தார். “இது ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்திற்கான விளம்பரமா? அப்படித்தான் நினைக்கிறேன்,” என்று அவர் அந்த வீடியோவில் கூறினார்.
சில நிமிடங்களுக்கு பிறகு, விமானம் முதல் சின்னத்திலிருந்து சிறிது தூரத்தில் அதே போன்ற மற்றொரு சின்னத்தை உருவாக்கத் தொடங்கியது. அதை பார்த்த அவர், “அவர்கள் வானம் முழுவதும் இதை பரப்பப் போகிறார்கள் என்று நினைக்கிறேன். இதுதான் உண்மையிலேயே விளம்பரம் தான் என்று கூறினார். அந்த பதிவின் தலைப்பில், “இன்று மேலே பாருங்கள், உங்களுக்கு மேலே இதுபோன்ற ஒன்றை நீங்கள் ஒருவேளை பார்க்கலாம் #fantastic4 பெட்ரோ பாஸ்கல், நீங்கள் அங்கே இருக்கிறீர்களா?? அருமையான மார்க்கெட்டிங்,” என்று அந்தப் பெண் எழுதினார்.
அவரது பதிவின் கமெண்ட் பிரிவில், பல பயனர்கள் தங்கள் பகுதியிலும் அதே “4” லோகோவை பார்த்ததாக பகிர்ந்து கொண்டனர். நானும் பார்த்தேன்… நான் ஒரு அமைதி சின்னம் என்று நினைத்தேன்,” என்றார். மற்றொருவர், “இது நியூயார்க் முழுவதும் ஜூலை 4 ஆம் தேதி நடந்தது,” என்று குறிப்பிட்டார். மற்றொரு பயனர், “இது ஒரு அருமையான விளம்பரம்,” என்று எழுதினார்.
மார்வெல் நிறுவனம், பெட்ரோ பாஸ்கல் நடிக்கும் தனது வரவிருக்கும் படமான ‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’-ஐ விளம்பரப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவது போல் தெரிகிறது. இருப்பினும் இது தங்கள் விளம்பரம் தான் என்று மார்வெல் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பார்த்த ஆரம்பத்தில் சிலர் வேற்று கிரகத்தினர் பூமி அருகே வந்து நம்பர் எழுதிவிட்டு சென்றார்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,.
https://www.instagram.com/reel/DLskkceyPV2/?utm_source=ig_web_copy_link