மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் திட்டங்களில் ஒன்று எஸ்ஐபி என்பதும், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியை நாம் தேர்வு செய்துவிட்டால், அந்த தேதியில் நம்முடைய வங்கி கணக்கிலிருந்து மியூச்சுவல் ஃபண்டுக்கு எஸ்ஐபி மூலம் பணம் சென்று விடும் என்பதும், நம்முடைய பணம் சேமித்து கொண்டே வரும் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் எதிர்பாராத காரணத்தினால் எஸ்ஐபியை கட்ட முடியவில்லை என்றால் என்ன ஆகும் என்ற சந்தேகத்திற்கு தற்போது விடை பார்ப்போம். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி பொருத்தவரை, மூன்று மாதங்கள் தொடர்ந்து வங்கி கணக்கில் பணம் இல்லை என்றால் எஸ்ஐபி தானாக ரத்து செய்யப்படும். ஆனால் இதற்காக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அபராதம் விதிப்பதில்லை என்றாலும், வங்கிகள் பணம் இல்லாமல் திரும்பிய செக்கிற்காக அபராதம் விதிக்கலாம்.
எனவே எஸ்ஐபி தொடர முடியவில்லை என்றால் உடனடியாக எஸ்ஐபியை ரத்து செய்யலாம் அல்லது “பாஸ்” என்ற ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம். சில மாதங்களுக்கு எஸ்ஐபி கட்ட முடியாவிட்டால், மியூச்சுவல் ஃபண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களின் இணையதளத்தின் மூலம் “பாஸ்” வசதியை பயன்படுத்த முடியும். எத்தனை மாதங்கள் செலுத்த முடியாதோ, அத்தனை மாதங்களுக்கு பாஸ் செய்துவிட்டு, அதன் பின்னர் தானாகவே மீண்டும் எஸ்ஐபி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை, நிரந்தரமாக எஸ்ஐபியை கட்ட முடியாத சூழலில், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியை ரத்து செய்யலாம். அப்போதே நிலவரப்படி உங்களுடைய பணம் திரும்ப கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது