இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பத்தாயிரம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள் முதல் ஒரு லட்ச ரூபாய் வருமானம் உள்ளவர்கள் வரை தங்களால் முயன்ற அளவு ஒவ்வொரு மாதமும் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் சிறுக சிறுக சேமிக்கப்படும் இந்த தொகை அவர்களது ஓய்வு காலத்தில் மிகப்பெரிய தொகையாக கிடைக்கும் என்பதால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்பவர் திடீரென ஒரு தொகை எதிர்பாராமல் கிடைத்தால் அந்த தொகையையும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதிலாக தாராளமாக முதலீடு செய்யலாம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 5000 முதலீடு செய்யும் ஒருவருக்கு திடீரென ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்தால் அந்த பணத்தையும் அவர் முதலீடு செய்ய விரும்பினால் அதே மியூச்சுவல் ஃபண்டிலோ அல்லது வேறு ஏதாவது நல்ல மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்யலாம். இவ்வாறு கூடுதலாக பணம் கிடைக்கும் போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருவது கூடுதல் பலனை அளிக்கும் என்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது
நான் மாதம் 5000 முதலீடு செய்கிறேன், இந்த பணத்தை வேறு செலவுக்கு வைத்துக் கொள்வோம் என்று எண்ணாமல் கூடுதலாக கிடைக்கும் பணத்தையும் அவ்வப்போது முதலீடு செய்ய வேண்டும் என்பதே ஒரு சிறந்த சேமிப்பாளருக்கு அழகு என்று கூறப்பட்டு வருகிறது