மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றும், மியூச்சுவல் ஃபண்டில் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், நாம் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திடீரென மூடப்பட்டு விட்டால் நமக்கு நஷ்டம் ஆகுமா, முதலீடு செய்த பணம் கிடைக்குமா என்ற கேள்வி பலருக்கு எழுதியிருக்கலாம். இது குறித்து தற்போது பார்ப்போம்.
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்படுகிறது என்றால், அந்த நிறுவனம் செபியுடன் முன்கூட்டியே மூடப்படும் தகவலை தெரிவிக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு முதலீட்டாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக, அந்த நிறுவனத்தின் அப்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் பண்டுகள் முதலீடு செய்த அனைவருக்கும் பிரித்து கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஒருவேளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்குகிறது என்றால், முதலீடு செய்தவர்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அவர்களுடைய முதலீடு ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடரும் அல்லது முதலீடு புதிய நிறுவனத்தின் முதலீட்டில் இணைக்கப்படும்.
எனவே, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டாலும் முதலீட்டாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அதே நேரத்தில் முதலீடு ஆரம்பிக்கும் போதே, ஒரு நிறுவனம் பாரம்பரிய மிக்க நிறுவனமா, லாபத்தில் உள்ள நிறுவனமா என்பதை உறுதி செய்த பின் முதலீடு செய்வது சிறந்தது.