இந்தச் சம்பவத்தால், அந்த பகுதியில் உள்ள கிராமத்தினர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டனர். தாங்கள் தெரியாமல் மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டோம் என்பதால், உள்ளூர் பூசாரி சில பரிகார சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இதனை அடுத்து, கானாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மொட்டை அடித்து, புனித நீராடி, சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும், சிலர் கோமியம் குடித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், மாடுகளை வணங்கி தாங்கள் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் மத உணர்வுகளை பாதிக்கக் கூடியதாக இருந்ததால், உடனடியாக அந்த உணவகத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பூரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஷங்கர் தெரிவித்துள்ளார்.