பயணி பின்னால் இருக்க.. டிராபிக் நடுவே கேப் ஓட்டுநர் செஞ்ச வேலை.. இந்தியாவையே அச்சப்பட வைத்த வீடியோ..

ஒரு காலத்தில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, டிரெயின் உள்ளிட்டவற்றை தாண்டி ஆட்டோ மற்றும் கார் டாக்ஸி உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அதன் ஒரு…

Mumbai Cab Driver

ஒரு காலத்தில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, டிரெயின் உள்ளிட்டவற்றை தாண்டி ஆட்டோ மற்றும் கார் டாக்ஸி உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அதன் ஒரு மேம்படுதலாக பலரும் ஓலா, உபர் என கேப் நிறுவனங்களின் மூலம் தாங்கள் எதிர்பார்ப்பதை விட குறைந்த தொகைக்கு அதிக தூரம் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

இதனால் இன்று அனைவரும் வீட்டில் இருந்து ஒரு இடத்திற்கு கிளம்புவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தங்களது போன் மூலம் பிரபல கேப் செயலியில் புக் செய்து விட்டால் வீட்டின் வாசலிலேயே வண்டி தேடி வந்துவிடும். மேலும் கட்டணமும் அதிலேயே நமக்கு தெரிந்துவிடும் என்பதால் சில விஷயங்கள் முன்பை விட தற்போது எளிதாகவும் அமைந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இப்படி தனியார் செயலி மூலம் இயங்கும் கேபில் சில பிரச்சனைகள் அரங்கேறுவதையும் நாம் மறுத்து விட முடியாது. அந்த வகையில் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த கேப் ஓட்டுநர் ஒருவர் பயணியை ஏற்றிக்கொண்டு செய்த ஒரு விஷயம் தான் தற்போது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேப் ட்ரைவர் செஞ்ச வேலை..

இது தொடர்பாக மும்பை பகுதியைச் சேர்ந்த ரோகன் குலா என்ற நபர் தனது எக்ஸ் தலத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இவர் ola செயலி மூலம் கேப் ஒன்றை புக் செய்திருந்த நிலையில் பின்னால் சீட்டில் அமர்ந்து பயணித்த போது அதன் டிரைவர் செய்து வரும் விஷயத்தை கவனித்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மும்பை மாநகரத்தில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் சூழலில் அந்த ஓலா ஓட்டுனரோ தனது ஃபோனில் ஆம்லெட் எப்படி சமைப்பது என்ற வீடியோவை பார்த்து வண்டி ஓட்டி உள்ளார்.

கொந்தளித்த நெட்டிசன்கள்

இது தவிர யூடியூபில் பிக் பாஸ் உள்ளிட்ட வீடியோவும் பார்த்து காரை இயக்க, பயணி ரோஹனோ தனக்கு ஆபத்து நேர்ந்து விடும் சூழலும் உருவாகி இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ அதிகம் வைரலாகி பலர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்த இதனை கவனித்த மும்பை டிராபிக் போலீஸ், எந்த இடத்தில் நடந்தது், முகவரி தொடர்பான விவரங்களையும் அந்த வீடியோவின் கீழ் கமெண்டில் குறிப்பிட்டிருந்தனர்.
ola driver

பொதுமக்கள் பலரும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று தான் இது போன்ற கேபை புக் செய்கின்றனர். அதிலும் இதுபோன்று அலட்சியமாக உயிருக்கு ஆபத்தான வகையில் வண்டி ஓட்டுவது நிச்சயம் தவறான ஒன்றுதான் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அதே போல வாடிக்கையாளரின் பதிவை கவனித்த ஓலா நிறுவனமும் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.