ஆசியாவின் பணக்காரர்கள் நகரம் என்ற அந்தஸ்தை மும்பை இழந்தது! இந்த அந்தஸ்தை தற்போது சீனாவின் ஷாங்காய் பெற்று, மும்பையை பின்னுக்கு தள்ளியுள்ளது.
2025ஆம் ஆண்டின் ஆசியாவின் பணக்கார நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் ஆசியாவின் பெருந்தொழில் அதிபர் தலைநகரம் என்ற அந்தஸ்தை முதல் முறையாக மும்பை இழந்துள்ளது. ஷாங்காய் தற்போது 92 பணக்காரர்கள் கொண்ட நகரமாக மாறியதால், மும்பையை 90 பணக்காரர்கள் என்ற எண்ணிக்கையுடன் 2வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, அமெரிக்கா 870 பணக்காரர்களுடன் உலகளவில் முன்னணியில் இருக்கிறது. இதையடுத்து சீனா 823 பணக்காரர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில், 175 பணக்காரர்கள் தனது செல்வத்தை அதிகரித்துள்ள நிலையில், 109 பேரின் சொத்து மதிப்பு நிலையான நிலையில் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். கௌதம் அதானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ₹8.6 லட்சம் கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டை விட ₹1 லட்சம் கோடி குறைவாகும். அதே நேரத்தில் அதானியின் சொத்து மதிப்பு 13% அதிகரித்து ₹8.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
சிலிக்கான் வேலி பணக்காரர்கள் உலகளவில் முன்னணி இடங்களை பிடித்துள்ளனர். அமெரிக்க தொழில் அதிபர்கள் 10 இடங்களில் 9-ஐ கைப்பற்றியுள்ளனர். அந்த பட்டியல் இதோ..
எலோன் மஸ்க் (Tesla) – $420 பில்லியன்
ஜெஃப் பெசோஸ் (Amazon) – $266 பில்லியன்
மார்க் சுக்கர்பெர்க் (Meta) – $242 பில்லியன்
லாரி எலிசன் (Oracle) – $203 பில்லியன்
வாரன் பஃபெட் (Berkshire Hathaway) – $167 பில்லியன்
லாரி பேஜ் (Alphabet) – $164 பில்லியன்
பெர்னார்ட் அர்னால்ட் (LVMH) – $157 பில்லியன்
ஸ்டீவ் பால்மர் (Microsoft) – $156 பில்லியன்
செர்கே பிரின் (Alphabet) – $148 பில்லியன்
பில் கேட்ஸ் (Microsoft) – $143 பில்லியன்