இந்த ஒப்பந்தத்தின் மூலம் AI கருவிகளை இந்திய மக்களுக்கு எளிதாகவும் மலிவாகவும் கொண்டு சேர்க்கலாம் என்றும், இந்திய சந்தைக்கு ஏற்ப கட்டண கட்டமைப்பு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாது, தமிழ் உட்பட இந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும் என்றும், மாணவர்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா போன்ற பெரிய நாட்டில் AI தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தால், AI சந்தை உலகளவில் மிகுந்த முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு என AI டேட்டா களஞ்சியங்களை உருவாக்க குஜராத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முகேஷ் அம்பானியின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
AI செயல்பாடுகள் மற்றும் டேட்டாக்களை இந்தியாவிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க இந்த முயற்சி வழிவகுக்கும். அதோடு, வேகமான, பாதுகாப்பான மற்றும் இந்திய பயனர்களுக்கு உகந்த செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை வழங்குவதே முகேஷ் அம்பானியின் நோக்கமாக உள்ளது.
இந்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் கீழ் இது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. OpenAI நிறுவனத்துடன் மட்டுமின்றி, மெட்டா நிறுவனத்துடனும் முகேஷ் அம்பானி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி எடுத்துள்ள இந்த முயற்சி காரணமாக, இந்தியாவில் கல்வி, விவசாயம், நிதி, மருத்துவம் போன்ற துறைகளில் AI பயன்பாடு அதிகரிக்கும். மேலும், தமிழ் உட்பட இந்திய மொழிகளில் ஆதரவு கிடைக்கும் என்பதால், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.