பிரதமர் மோடிக்கு திடீரென போன் செய்த வங்கதேச பிரதமர் முகமது யூனிஸ்.. என்ன பேசினார்கள்?

வங்கதேசத்தில் சமீபத்தில் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முகமது யூனிஸ், இந்திய பிரதமர் மோடியை போனில் தொடர்பு கொண்டு பேசியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமராக…

india bangaladesh

வங்கதேசத்தில் சமீபத்தில் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முகமது யூனிஸ், இந்திய பிரதமர் மோடியை போனில் தொடர்பு கொண்டு பேசியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததை அடுத்து முகமது யூனிஸ் என்பவர் ஆட்சி பொறுப்பை ஏற்றார் என்பதும் அவர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வங்கதேசத்தில் இன்னும் போராட்டம் வன்முறை களமாக மாறி உள்ள நிலையில் குறிப்பாக இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியா இது குறித்து தனது கவலையை பதிவு செய்த நிலையில் வங்கதேச பிரதமர் முகமது யூனிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு போன் செய்து வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் மைனாரிட்டிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.

இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’முகமது யூனீஸ் அவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்தும் ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்துக்கு இந்தியாவின் ஆதரவு வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தினார். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை அவர் என்னிடம் உறுதி செய்தார்’ என்று தெரிவித்துள்ளார்.