மத்திய பிரதேச மாநிலத்தில் 8ஆம் வகுப்பு படித்ஹு கொண்டிருந்தபோது வீட்டை விட்டு ஓடி போன 15 வயது சிறுமி, 8 ஆண்டுகள் கழித்து திருமணம் முடிந்து மீண்டும் வீடு திரும்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த காண்டா என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி படிப்பின் மீது அக்கறை இல்லாமல் இருந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவர் நன்றாக படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
மத்திய பிரதேசம் மாநிலத்திலிருந்து அவர் மும்பைக்கு ரயில்வே சென்றதாக தெரிகிறது. மும்பை ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் அவருக்கு பயம் ஏற்பட்டதாகவும் இதன் பிறகு இதன் பிறகு அவர் அழுததாகவும் தெரிகிறது. சிறுமி ஒருவர் தனியாக அழுது கொண்டிருந்ததை பார்த்த சமூக சேவை பெண் ஒருவர் தன்னுடன் அழைத்துச் சென்று அவரது வீட்டிலேயே வளர்த்து வந்தார்
பின்னர் அருகில் உள்ள ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்து அந்த பெண் வேலை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொண்டதாகவும் திருமண ஆகிய இரண்டு ஆண்டுகள் கழித்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் அவர் தன்னை வளர்த்த பெண்ணிடமே வந்து தங்கியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது குடும்பத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை நகரில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மும்பை காவல்துறையினர் அவருடைய செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடம் கண்டுபிடித்தார். இதனை அடுத்து அந்த பெண்ணை உறவினர்களுடன் ஒப்படைத்தனர்.
எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்பி வந்த மகளை பார்த்து பெற்றோர்கள் மிகுந்த பரவசம் அடைந்தனர். இனிமேல் அவர் வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்றும் கடைசிவரை பெற்றோரிடமே இருப்பேன் என்றும் கூறியதை கேட்டு பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்