தாய் என்ற உறவு மிகவும் புனிதமானது என்பதும், குறிப்பாக தன்னுடைய பிள்ளைகளுக்காக உயிரையே கொடுக்கக்கூடிய ஒரு தியாக மனப்பான்மை தான் தாய்மை என்பதும், உலகம் முழுவதும் அறியப்பட்டு வருகிறது.
ஆனால், புனே நகரில் பெற்ற மகளை ஒரு தாய் குளிக்கும் போதும், உடைமாற்றும் போதும் வீடியோ எடுத்து, ஆன்லைனில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புனே நகரைச் சேர்ந்த 14 வயது மகள், குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும், அவருடைய தாயார் மொபைலில் வீடியோ எடுத்து, தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சமூக ஊடகத்திற்கும் பகிர்ந்துள்ளார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, தனது அத்தை சொன்னதை கேட்டதிலிருந்து தான் அந்த வீடியோ வெளியானது தெரிந்தது என்றும், அதன் பிறகு அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், தன்னுடைய ரகசிய காதலனுடன் கூடிய உறவை மகள் பார்த்துவிட்டதாகவும், அதனால் அவரை மிரட்டுவதற்காக இந்த செயலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், தன்னுடைய காதலன்தான் அந்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர உதவி செய்ததாகவும் கூறியதை அடுத்து, அந்த பெண்ணும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து மொபைல்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நெட்டிசன்கள், “இப்படி எல்லாம் ஒரு ஜென்மம் இருக்குமா? ஒரு தாயே தன் மகளை ஆபாச வீடியோ எடுப்பதா? மிருக வகைகளில் கூட தாய்மை என்பது புனிதமாக போற்றப்படும் நிலையில், ஒரு பெண்ணாக இருந்து இப்படி செய்யலாமா?” என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்