உன் ரத்தத்தை குடிப்பேன்.. தாயை அடித்து துன்புறுத்திய சைக்கோ மகள் கைது..

  பெற்ற தாயை அடித்து, உதைத்து துன்புறுத்திய மகள், “தனக்கு சொத்துக்களை எழுதி வைக்கவில்லை என்றால் கொலை செய்வேன்” என்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரீதா என்ற பெண் சமீபத்தில்…

mother daughter

 

பெற்ற தாயை அடித்து, உதைத்து துன்புறுத்திய மகள், “தனக்கு சொத்துக்களை எழுதி வைக்கவில்லை என்றால் கொலை செய்வேன்” என்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரீதா என்ற பெண் சமீபத்தில் தனது தாயார் நிர்மலா தேவியை பார்க்க வந்திருந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட ரீதா, ஏற்கனவே தனது தாயிடம் உள்ள சொத்தை விற்று 65 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது மற்ற சொத்துக்களையும் வாங்கி விட வேண்டும் என்ற நோக்கில், தாயை டார்ச்சர் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து வெளியான வீடியோவில், தனது தாயையே ரீதா அடித்து துன்புறுத்தியதாகவும், தொடை, கைகள், கால்களில் அடித்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், “உன்னை கடித்து உன் ரத்தத்தை குடித்து விடுவேன்” என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தன்னை விட்டு விடுமாறு அழுது கொண்ட அந்த தாயின் கண்ணீரும், துடிப்பும் அந்த பெண்ணை எதுவுமே செய்யவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, ரீதாவின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சொத்துக்காக தனது பெற்ற தாயையே அடித்து துன்புறுத்திய மகள் சைக்கோவாக மாறி, தாயின் ரத்தத்தையே குடிப்பேன் என்று கூறியது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.