“ரூ.1.8 கோடி பாக்கெட்’ல இருக்கு, ஆனா ஒரு நல்ல வீடு கூட வாங்க முடியல! இப்படி தான் ஒரு இளைஞர் தனது உணர்வுகளை Reddit-ல் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி, நாட்டின் பெரும்பாலான மாநகரங்களில் இருக்கும் வீட்டு வாடகை மற்றும் விலை பிரச்சனையை வெளிச்சம் போட்டுள்ளது.
இந்த இளைஞர் குருகிராமில் ஒரு 3BHK வீடு வாங்க முயற்சித்து வருகிறார். குறிப்பாக, DLF சொசைட்டியில், மானேசர் பகுதியை தவிர்த்து நல்ல இடத்தில் வீடு தேடுகிறார். அவருடைய முக்கிய நோக்கம் விரைவில் அவருடைய பெற்றோர்கள் கூடவே குடிவர உள்ளதால், வீடு அவசியமாயிருக்கிறது. ஆனாலும், சுமார் ரூ.1.8 கோடி பட்ஜெட் இருந்தும், தனது மனதுக்கு பிடித்த வீடு கிடைக்காமல் வருத்தத்தில் உள்ளார்.
“வாடகை விலைகள் தாறுமாறாக இருக்கின்றன. அதனாலேயே குடும்பத்தினரிடம் இருந்து வீடு வாங்க அழுத்தம் வருகிறது. ஆனா இந்த விலைக்கு ஒரு நல்ல DLF சொசைட்டியில் வீடு வாங்க முடியவில்லை, யாராவது உதவ முடியுமா’ என்ற அவரது பதிவுக்கு பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பயனர்களின் வைரல் கருத்துகள்:
“South City 2-யை பாருங்க, பழைய வீடுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு.”
“DLF சொசைட்டியில் 2.5 கோடி தான் துவக்கம். 1.8 கோடி என்கிறீங்க… இந்த விலைக்கு வீடு வாங்க சாத்தியமே இல்லை.
“Sector 67-ல் builder floor-லாம் பார்த்தீங்கனா, கிட்டத்தட்ட அந்த ரேஞ்சுல கிடைக்க வாய்ப்பு இருக்கு.”
மாநகரங்களில் வீடு வாங்குவது என்பது சாமானிய வருமானம் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கில் பட்ஜெட் வைத்தவர்களுக்கே கூட சவாலான விஷயமா மாறிவிட்டது என்பதே இவரது பதிவில் இருந்து தெரிய வருகிறது.