சிப்ஸ் பாக்கெட்ல காற்று அதிகமா இருக்குறது.. உங்கள ஏமாத்துறதுக்கு இல்ல.. இப்படியும் ஒரு அறிவியல் காரணம் இருக்கு..

என்ன தான் கடையில் இருந்து தின்பண்டங்கள் உண்பது உடல் நலத்திற்கு தீங்கு உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் மக்கள் பலரும் குறைந்த அளவுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அதை உண்ண வேண்டும் என நிச்சயம் விரும்புவார்கள். அந்த…

Chips packet air reason

என்ன தான் கடையில் இருந்து தின்பண்டங்கள் உண்பது உடல் நலத்திற்கு தீங்கு உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் மக்கள் பலரும் குறைந்த அளவுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அதை உண்ண வேண்டும் என நிச்சயம் விரும்புவார்கள். அந்த வகையில், பலரது பேவரைட் தின்பண்டமாக இருக்கும் ஒன்று தான் பாக்கெட் சிப்ஸ். Lays, Bingo என பல நிறுவனங்கள் உள்ள சூழலில், இந்த பாக்கெட்டிற்குள் சிப்ஸை விட காற்று தான் அதிகமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதாக பலரும் குறை கூறியும் வருகின்றனர். ஆனால், நிஜத்தில் சிப்ஸை விட பிளாஸ்ட்டிக் கவருக்குள் காற்று அதிகமாக இருப்பதற்குசில அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளது. இன்று மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பல சிப்ஸ் நிறுவனங்கள் தங்களது பாக்கெட்டில் அதிகமாக காற்றை தான் வைத்துள்ளது என தொடர்ந்து மீம்ஸ்களும், வேடிக்கையான கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் இருந்து தான் வருகிறது.

காற்றுக்கு காரணம் இருக்கு..

இதற்கான காரணம் என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம். உள்ளே இருக்கும் சிப்ஸை விட, காற்று அதிகமாக நிரம்பி இருப்பதால் காற்றை தான் பணம் கொடுத்து வருகிறோம் என பலரும் கூறுவார்கள். ஆனால் இப்படி காற்று நிரம்பி இருப்பதற்கு மோசடி இல்லாமல் வேறொரு காரணமும் உள்ளது. இதன் பெயர் Slack Fill என குறிப்பிடப்படும் நிலையில், இது வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கான முயற்சி கிடையாது.

பொதுவாக, சிப்ஸ் பாக்கெட்டுகள் தயார் செய்யும் இடத்தில் இருந்து அதனை விற்பனை செய்யும் இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால் ஒரு டப்பாவுக்குள் அனைத்தையும் அடுக்கி வைக்கும் போது ஒன்றின் மீது ஒன்றாக தான் வைப்பார்கள். அப்போது பாக்கெட் முழுக்க சிப்ஸ் மட்டும் இருந்தால் செல்லும் வழியில் வண்டி செல்லும் வேகத்திற்கு ஈடாக அனைத்தும் ஒன்றன்மீது ஒன்று மோதி சிப்ஸ்கள் உடைவதுடன் வடிவம் இழந்தும் போய் விடும்.

நைட்ரஜன் காற்று

இதை தவிர்ப்பதற்காக காற்று நிரப்பப்படுவதுடன் சிப்ஸ் பாக்கெட்டுகள் மாறி மாறி மோதினாலும் அவை எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது. மேலும், அந்த பாக்கெட்டிற்குள் நைட்ரஜன் கேஸ் தான் நிரப்பப்பட்டு வருகிறது. வெறும் ஆக்சிஜன் மட்டும் உள்ளே இருந்தால் அது சிப்ஸுடன் சேர்ந்து பாக்டீரியாவை உருவாக்கி சிப்ஸின் நிறத்தை கூட மாற்றி அதன் சுவையை இழக்க வைத்து கெட்டு போவதற்கான வாய்ப்புகளும் உருவாகும் என கூறப்படுகிறது.

இதனால், நைட்ரஜனை சேர்க்கும் போது அவை சிப்ஸுடன் எந்த ரியாக்ஷனிலும் ஈடுபடாமல் இருக்கும் என்பதால் பாக்கெட்டை பிரிக்கும் வரை அதன் சுவை மாறாமல் அப்படியே இருக்கும். பலரும் சிப்ஸ் பாக்கெட்டில் காற்று மட்டுமே இருப்பதாக விமர்சனம் செய்து வரும் நிலையில், அதற்கான காரணம் நிச்சயம் பலருக்கும் ஆச்சர்யம் தான்.