மாதம் 15 ரூபாய் தான் வாடகை.. கரண்ட் பில் ரூ.4.. இந்தியாவின் எந்த நகரத்தில் தெரியுமா?

சென்னை உள்பட பல நகரங்களில் வாடகை என்பது ஒரு மிகப்பெரிய தொகையாக இருக்கும் நிலையில் மெடிக்கல் காலேஜ் மாணவர் ஒருவர் மாத வாடகை வெறும் 15 ரூபாய் என்றும் ஒவ்வொரு மாதமும் மின்சார கட்டணம்…

room

சென்னை உள்பட பல நகரங்களில் வாடகை என்பது ஒரு மிகப்பெரிய தொகையாக இருக்கும் நிலையில் மெடிக்கல் காலேஜ் மாணவர் ஒருவர் மாத வாடகை வெறும் 15 ரூபாய் என்றும் ஒவ்வொரு மாதமும் மின்சார கட்டணம் வெறும் 4 ரூபாய் என்றும் கூறிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வாடகை ஆயிர கணக்கில் மற்றும் இலட்சக்கணக்கில் இருக்கும் நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் என்ற பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவர் ’தன்னுடைய ஹாஸ்டலுக்கு வெறும் 15 ரூபாய் மட்டுமே வாடகை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது படிப்பிற்காக மாதம் 5,586 கட்டணம் கட்டுவதாகவும் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு மாதம் 15 ரூபாயும் அதற்கான மின்சார கட்டணம் வெறும் 4 ரூபாய் மட்டுமே செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மிகவும் வசதியான அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ள அறை தனக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும். சுத்தமான பெட், டேபிள், சேர், கபோர்டு மற்றும் 24 மணி நேர மின்சார வசதியுடன் கூடிய அறையில் தான் தங்கி இருப்பதாகவும் வாடகை 15 ரூபாய் மற்றும் மின்சார கட்டணம் 4 என மொத்தமே தனக்கு 19 ரூபாய் மட்டுமே செலவாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அழகான ஒரு பால்கனி, அந்த பால்கனியில் இருந்து சூரிய உதயத்தை பார்க்கும் வசதி போன்றவை இருப்பதாகவும் உண்மையிலேயே இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/IndianTechGuide/status/1838576770184024160