வடகிழக்குப் பருவமழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..தயாரா இருங்க மக்களே..!

By John A

Published:

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சீசன் முடிந்த நிலையில் அடுத்ததாக அதிக மழையைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கவிருக்கும் இந்தப் பருவமழையானது வழக்கத்தினை விட சுமார் 111% கூடுதலாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுமட்டுமன்றி வட தமிழகத்தில் அதிக மழைபொழிவும், தென்தமிழ்நாட்டில் குறைவான மழைப்பொழிவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது பருவமழையானது இயல்பை விட அதிகமாகப் பெய்து வருகிறது. மேலும் பல நாட்கள் பொழிய வேண்டிய மழையானது ஒரே நாளில் கொட்டித் தீர்ப்பதால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. தலைநகர் சென்னையும் பருவமழைக் காலங்களில் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடந்த முறை வந்த மிக்ஜாம் புயல், மாண்டஸ் புயல் போன்றவை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது.

சென்னையின் பல இடங்களில் தற்போது மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை பொழிவின் போது தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் அமைப்புகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை தொடரும் இந்த மழையானது சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தில் தனது கோர முகத்தினைக் காட்டுகிறது.

இந்தியா ஜெயிச்சாலும்… ரோஹித் இப்படி ஒரு சரிவை சந்திச்சுட்டாரே.. ஐந்து வருடங்களில் முதல் முறையாக நடந்த சோகம்..

எனவே பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டால் வழக்கமாகப் பெய்யும் பருவமழையிலிருந்து நமது உடமைகளைக் பத்திரப்படுத்தலாம். சென்னையின் பல நீர்வழித்தடங்கள் அனைத்தும் அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாறிவிட்டதால் மழை பெய்யும் போது நீர் செல்வதற்கு பாதைகளின்றி ஓரிடத்தில் தேங்கி வெள்ளம் உருவாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளால் பாடம் கற்றுக் கொண்ட சென்னை மாநகராட்சி தற்போது வெள்ள பாதிப்புகள் நிகழா வண்ணம் தகுந்த சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.