உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைலில் உளவுச்செயலி புகுந்துவிட்டதா? எப்படி கண்டுபிடிப்பது?

By Bala Siva

Published:

 

ஒரு மொபைல் போன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட டேட்டா களமாக இருந்து வரும் நிலையில் அதில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் நம் மொபைல் போன் என்பது மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய ஒரு பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அதில் உளவுச்செயலி மட்டும் உங்கள் மொபைல் போனில் நுழைந்து விட்டால் நீங்கள் யாருக்கு கால் செய்கிறீர்கள்? யாருக்கு மெசேஜ் அனுப்புகிறீர்கள்? எதை போட்டோ எடுக்கிறீர்கள்? யாருடன் வீடியோ காலில் பேசுகிறீர்கள்? என்பது உட்பட அனைத்து விவரங்களும் உளவு பார்க்கப்படும் என்பதும் அதிலிருந்து உங்களால் தப்பவே முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உங்கள் மொபைலில் உளவுச்செயலி  புகுந்து விட்டதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்பதை தற்போது பார்ப்போம்.

பாப் அப்ஸ் எனப்படும் தேவையில்லாத விளம்பரங்கள் உங்கள் மொபைல் திரையில் வந்துகொண்டே இருந்தால் உளவுச் செயலிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களது  மொபைல் டேட்டா கட்டுக்கடங்காமல் உபயோகிப்படுகிறதா? எந்தச் செயலி இத்தனை டேட்டாவை உபயோகிக்கிறது எனத் தேடியும் கிடைக்கவில்லை எனில் உளவுச் செயலிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மொபைல் தொடர்ந்து சுணங்குகிறதா, எதைத் திறந்தாலும் தடுமாறி நேரம் பிடித்துத் திறக்கிறதா? உளவுச்செயலி இருப்பதற்குவ் வாய்ப்புகள் அதிகம்

எவ்வளவு முறை நீக்கினாலும் தேவையில்லாத செயலிகள் தொடர்ந்து மொபைலில் மீண்டும் மீண்டும் நிறுவப்படுகிறதா! உளவுச் செயலிகள் காரணமாக இருக்கலாம்.

மொபைலின் பேட்டரி இருப்பு விரைவில் தீர்ந்துவிடுவது என்பது இன்னொரு அறிகுறி.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனே உங்கள் மொபைலை உடனே ஒரு டெக்னிக்கல் நபரிடம் கொடுத்து உளவுச்செயலி இருக்கிறதா? என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள்.

Tags: data, hacking, mobile