மொபைல் போன் திருடு போனாலும் எதையும் மாற்ற முடியாது.. ஆண்ட்ராய்டு கொண்டு வந்த புதிய வசதி..!

By Bala Siva

Published:

ஒரு மொபைல் போன் திருட்டு போய்விட்டால், திருடியவர்கள் அதை சில டெக்னிக்கல் வழிகளில் இயக்கி விடுவார்கள் என்பதும், பாஸ்வேர்டுகளை மாற்றி தங்கள் போனாக மாற்றி விடுவார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால், கூகுள் தற்போது தங்களுடைய ஆண்ட்ராய்டில் புதிய வசதியை கொண்டு வந்த நிலையில், இனி போன் திருடு போனாலும், திருடியவர்கள் அதில் உள்ள எந்த பாஸ்வேர்டையும் மாற்ற முடியாது என்று கூறப்படுகிறது.

ஏனெனில் போன் உரிமையாளரின் பிங்கர் பிரிண்ட் அல்லது பேஸ் ஐடி பாஸ்வேர்டை மாற்றுவதற்கு இனி தேவைப்படும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே பாஸ்வேர்டு உள்பட எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியும் என்ற வகையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, போன் தொலைந்து போனாலும், போனை திருடியவர்கள் அதில் உள்ள எந்த டேட்டாவையும் எடுக்க முடியாது என்றும், அதில் உள்ள பாஸ்வேர்டை சரியாக கண்டுபிடித்தாலும் கூட பாஸ்வேர்டை மாற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது.

கூகுள் ஆண்ட்ராய்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பல்வேறு வசதிகளை அவ்வப்போது வழங்கி வந்த நிலையில், இப்போது இந்த பயோமெட்ரிக் அம்சத்தையும் சேர்த்திருப்பதால், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடையலாம்.