இண்டிகா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் 45 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தொலைந்த நிலையில் விமான நிறுவனம் வெறும் ரூ.2,450 மட்டும் இழப்பீடாக கொடுக்க முன்வந்துள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் கெளஹாத்தி சென்றபோது எனது பேக்கை இன்டிகோ விமான நிறுவனம் தொலைத்து விட்டது. அதில் முக்கிய விலை மிகுந்த பொருட்கள், ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட சில ஆவணங்களும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது பேக் தொலைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் இண்டிகோ நிறுவனம் தனக்கு ரூ.2450 0 மட்டும் இழப்பீடு கொடுக்க முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பேக்கின் மதிப்பு அதைவிட அதிகம் என்றும் அதில் சில விலைமதிப்பில்லாத பொருட்கள் இருந்தது என்றும் குறிப்பாக எனது ஆதார் கார்டு பான் கார்டு அதில் தான் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. சிலர் தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இன்னும் சிலர் பொதுவாக விமானத்தில் செல்லும்போது பேக்கில் விலைமிகுந்த பொருட்கள் வைக்கக்கூடாது என்று குறிப்புகள் கூறப்பட்டிருக்கும் என்றும் குறிப்பாக ஆதார் கார்டு பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பேக்கில் வைக்க வேண்டாம் என்றும் விமான நிறுவனத்தின் இழப்பீடு சரிதான் என்றும் கூறியுள்ளனர். இது குறித்த வாக்குவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.