மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபரேஷன் சிஸ்டத்தில் திடீரென ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து உலகம் முழுவதும் வங்கிகள், ஏர்லைன்ஸ், அலுவலகங்கள் திணறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெருவாரியான வங்கிகள், ஏர்லைன்ஸ் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுவது மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது தெரிந்தது. இந்த நிலையில் திடீரென மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீல கலர் மாறி வந்ததை அடுத்து வங்கி சேவைகள், விமான சேவைகள், மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபரேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தும் உலகின் பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தங்களது சமூக வலைதளங்களில் இது குறித்து தகவல்களை பரிமாறி வருகின்றனர். இது குறித்து மைக்ரோசாப்ட் அனுப்பிய மெசேஜில், உங்கள் கம்ப்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும், நாங்கள் இந்த பிரச்சனைக்கான தகவலை சேகரித்து வருகிறோம், விரைவில் சரி செய்யப்படும்’ என்று அனுப்பி உள்ளது.
ஆனால் பலருக்கும் இந்த சிக்கல் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்று இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் செக்யூரிட்டி சாப்ட்வேர் அப்டேட் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வல்லுநர்கள் சரி செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.