கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்காவின் சில கொள்கை முடிவுகள் உலக பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுடன் அதிகரித்து வரும் பதற்றங்கள், மைக்ரோசிப் நெருக்கடி, மற்றும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாட்டின் வியத்தகு மாற்றம் ஆகியவை பொருளாதார மற்றும் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடன் மோதல்: பொருளாதார விளைவுகள்
இந்த நெருக்கடியின் முக்கிய அம்சமாக நீண்ட காலமாக அமெரிக்காவின் முக்கிய பங்காளியாக இருந்து வரும் இந்தியா உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால், மருந்துகள், மின்னணு சாதனங்கள், மற்றும் ஜவுளி போன்ற முக்கிய இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா பெரும் வரிகளை விதித்து, கடுமையான பொருளாதார பழிவாங்கல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த செயல் இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கமாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் தாக்கம்
அமெரிக்காவிற்குத் தேவையான generic மருந்துகளில் 20%-க்கும் அதிகமானவை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, அந்நாட்டின் சுகாதார அமைப்பை நிலையற்றதாக்கும் என்று அஞ்சப்படுகிறது. மருந்துகள் விலை உயர்வு, மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறைஆகிய சிக்கல்கள் அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கலாம் என அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மைக்ரோசிப் நெருக்கடி
அடுத்தகட்டமாக அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், தொழில்நுட்ப தற்சார்புக்கான தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். டிஎஸ்எம்சி (TSMC) மற்றும் சாம்சங் போன்ற செமிகண்டக்டர் ஜாம்பவான்களை அமெரிக்காவிற்கு தங்கள் உற்பத்தி தளங்களை மாற்றும்படி அவர் அழுத்தம் கொடுக்கிறார். ஆனால், இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு எதிராக சில நாடுகள் ஒன்று சேரும் அபாயம் இருப்பதை அந்நாடு உணரவில்லை.
மாறிவரும் உலகளாவிய கூட்டணிகள்
பிரேசிலிலிருந்து உணவு இறக்குமதிகள் முதல் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு இடையேயான இயற்கை எரிவாயுக் குழாய் இணைப்புகள் வரை, உலகளாவிய கூட்டணிகள் வேகமாக மாறி வருகின்றன. ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கின் முக்கிய நாடாக கருதப்பட்ட ஜப்பான், இப்போது தனது சொந்த பாதையில் பயணிக்கிறது. அது பிரிக்ஸ் நாடுகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்துவதுடன், அமெரிக்க கருவூல பத்திரங்களில் தனது முதலீடுகளை மறுபரிசீலனை செய்து வருகிறது.
மொத்தத்தில் அமெரிக்கா தனது தவறான வர்த்தக கொள்கைகளால் வல்லரசு என்ற பிம்பத்தை இழக்கிறது என்றும் இப்போது டிரம்ப் நினைத்தால் கூட சரிசெய்துவிடலாம், ஆனால் அவர் யார் சொல்வதையும் கேட்க மாட்டார் என்பது தான் பிரச்சனை என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
