தொடர்ந்து வேலைநீக்கம் செய்யும் மெட்டா… இந்தியாவில் மட்டும் ஆட்கள் தேர்வு..!

  மெட்டா நிறுவனம் உலகம் முழுவதும் தங்கள் கிளைகளில் உள்ள ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

meta ai

 

மெட்டா நிறுவனம் உலகம் முழுவதும் தங்கள் கிளைகளில் உள்ள ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக பல நிறுவனங்கள் வேலையாட்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வரும் நிலையில், சமீபத்தில் பேஸ்புக் உள்பட சில நிறுவனங்களைக் கொண்ட மெட்டா நிறுவனம் 5% ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் பெங்களூரை தலைமை இடமாக கொண்ட மெட்டா அலுவலகத்திற்கு புதிதாக ஆட்களை எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மென்பொருள் பொறியாளர்கள், மெஷின் லெர்னிங் மற்றும் சிப் டிசைன் ஆகிய பணிகளுக்காக புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

உலகளாவிய அளவில் வேலை நீக்க நடவடிக்கை எடுத்தாலும், இந்தியாவில் மெட்டா நிறுவனம் தனது முதலீடுகளை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தற்போது வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஆட்கள் எடுக்கும் பணியை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.