பூங்காங்களுக்கு ஆண்களும், பெண்களும் இணைந்து செல்லத் தடை.. தாலிபான்கள் போட்ட அடுத்த கண்டிஷன்!

By Gayathri A

Published:

பல ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. தாலிபான்கள் பொதுமக்கள் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி வருகின்றனர்.

மேலும் ஆண்- பெண் பாலின வேற்றுமையினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அவ்வப்போது செயல்படுத்தி சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் 6 ஆம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்க அனுமதி கிடையாது என்று கூறி சர்ச்சையினை ஏற்படுத்தினர்.

இந்தநிலையில் தற்போது பொது இடங்களில் உள்ள பூங்காக்களுக்குச் செல்லும்போது ஆண், பெண் என இருவரும் ஒன்றாகச் சேர்ந்து செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது வாரத்தில் 4 நாட்கள் ஆண்களும், 3 நாட்கள் பெண்களும் என  பூங்காக்களுக்கு அவரவர்க்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தாலிபான்கள் போட்ட இந்தக் கட்டுப்பாடு குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment